தக்காளி பிரச்னை! 

1850 -ஆம் ஆண்டு வரையில் தக்காளி அமெரிக்காவில் கேள்விப்படாத ஒன்று. பிறகு அது சர்ச்சைக்கும் இடமாகியது.
தக்காளி பிரச்னை! 

1850 -ஆம் ஆண்டு வரையில் தக்காளி அமெரிக்காவில் கேள்விப்படாத ஒன்று. பிறகு அது சர்ச்சைக்கும் இடமாகியது. தக்காளி காய்கறி வகையா? பழ வகையா? சண்டை தீரவில்லை. சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழக்குப் போனது. ஒன்பது நீதிபதிகள் தொடர்ந்து வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கினார்கள்.
தீர்ப்பு: தக்காளி சட்டப்படி ஒரு காய்கறி வகையே!
ஆதினமிளகி, வீரசிகாமணி.
• "இராஜரத்தினம்' எனப்படுவது வைரத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பெயர் ஆகும். முத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பெயர் "ராணி ரத்தினம்' ஆகும்.
• இந்தியாவில் ஜெய்ப்பூர் "இளஞ்சிவப்பு நகரம்' என்றும், மைசூர் "தீப நகரம்' என்றும், பெங்களூரு "பூங்கா நகரம்' என்று சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
• 1937-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் நிறுவப்பட்ட CHROME  
LEATHER என்னும் நிறுவனத்தின் பெயரே பிற்காலத்தில் அப்பகுதிக்கு, "குரோம்பேட்டை' எனப் பெயர் வரக் காரணமாயிற்று.
• தேனில் இரும்புச்சத்து, கார்போ ஹைட்ரேட் மற்றும் குளுகோஸ் இருக்கிறது. இதை சிறுநீரக அலர்ஜி உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது. 
எல்.நஞ்சன், முக்கிமலை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com