மைக்ரோ கதை
By DIN | Published On : 29th September 2019 10:00 AM | Last Updated : 29th September 2019 10:00 AM | அ+அ அ- |

மருந்துக் கடைக்காரர் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனை கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே போனார். 10 நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். மருந்து விற்ற பணம் 500 ரூபாயை பையன் அவரிடம் கொடுத்தான். வாங்கிப் பார்த்த அவர் அவனிடம் கோபத்துடன், "என்னப்பா நீ... இது நல்ல நோட்டு இல்லை. கலர் ஜெராக்ஸ் நோட்டு. பார்த்து வாங்கக் கூடாதா?'' என்று சத்தம் போட்டார். கடையில் வேலை செய்த பையன் மெüனமாக இருந்தான்.
சிறிது நேரம் கழித்து, " எந்த மருந்தை விற்றாய்?'' என்று கேட்டார். அவன் ஷெல்ப்பில் மேல் வரிசையில் இருந்ததாகச் சொன்னான்.
கடைக்காரரின் முகம் மலர்ந்தது.
"அது காலாவதியான மருந்து. வெளியே தூக்கிப் போடணும் என்று தனியா எடுத்து வச்சிருந்தேன்'' என்றார்.
அ.ஷண்முக சுந்தரம், பெங்களூர்.