

"ஒரு நாள் கூத்து', "டிக் டிக் டிக்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவரின் தீவிர ரசிகரான பிரபு என்பவர் நிவேதாவின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதை அறிந்த நிவேதா பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்த போது அவரை நேரில் அழைத்து அவருடன் சிறிது நேரம் உரையாடி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
"கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "சலார்'. இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல்தொடங்க உள்ளது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களின் படங்களில் பிரபாஸ் நடிக்க உள்ளார். "பாகுபலி' படங்களுக்குப் பிறகு அவருக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த "வேதாளம்', "விவேகம்' ஆகிய படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு இணைய தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால், அஜித்தின் பழைய படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.
""என் பெயரில் உள்ள போலியான சுட்டுரை கணக்கில் "வாடிவாசல்' படத்திலிருந்து நான் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, "வாடிவாசல்' படம், சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் வந்தே தீரும்'' என்கிறார் தயாரிப்பாளர் தாணு.
"நானும் ரவுடிதான்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்'. இது இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் கதை. ஒருவர் நயன்தாரா. இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா படத்தில் இருந்து விலகி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயமோகன் எழுதிய "துணைவன்' சிறுகதையை மையமாகக் கொண்டு படம் இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த சிறுகதையை திரைக்கதையாக மாற்றி வருகிறார் வெற்றி மாறன். இதில் சூரியோடு இயக்குநர் பாரதிராஜாவும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.