அந்​தி​பூக்​கள்

அவர்​க​ளுக்கு ஆறு​தல் கூறி​ய​வாறு, ""நீரூ வந்து கவ​லைப்​ப​டாதே, சுசீலா... உனக்கு இங்கே என்ன குறைச்​சல் ? நீ போ​டற தையல், எம்ப்​ரா​ய்​டரி வேலை​யெல்​லாம் ஆன்​லை​னில் வித்து ரமா காசாய் உனக்​குத்​தானே தரு
அந்​தி​பூக்​கள்


​சென்ற இதழ் தொடர்ச்சி...

அவர்​க​ளுக்கு ஆறு​தல் கூறி​ய​வாறு, ""நீரூ வந்து கவ​லைப்​ப​டாதே, சுசீலா... உனக்கு இங்கே என்ன குறைச்​சல் ? நீ போ​டற தையல், எம்ப்​ரா​ய்​டரி வேலை​யெல்​லாம் ஆன்​லை​னில் வித்து ரமா காசாய் உனக்​குத்​தானே தரு​கி​றாள்? நல்லா பாடு​வாய். பிரார்த்​தனை பாடல்​கள் எல்​லாம் உன்​னு​டைய குர​லில் ஒலிக்​கி​றது. எல்​லா​ரு​டைய திற​மை​க​ளும் இங்கே வெளிப்படுத்​து​வ​தற்கு ரமா வாய்ப்​புத் தரு​கி​றாள். என் கதை​தான் சோக கதை'' என்​றாள்.

""ஆனா​லும் அல்லா பெயரை சொல்​லிக் கொண்டு நான் வாழ​வில்​லையா ? என் முன்​னா​லேயே சுனா​மி​யால் என் மொத்த குடும்​பம் அழிந்​த​தைப் பார்த்​தேனே'' என்​றாள் வருத்​த​து​டன்.

ஆனால் ராம​நா​தன் மட்டும் எது​வும் பேசா​மல் புத்​த​கம் கையு​மாய் சுற்​றிக் கொண்டு இருக்​கி​றார். உடனே ராம​நா​தன், ""அதெல்​லாம் ஒண்​ணு​மில்லை'' என்​றார்.

""அப்​ப​டி​யில்லை ராம​னாதா ! நாம் எல்​லாம் மனம் விட்டு பேச​ணும். காலை​யில் பிரார்த்​த​னை​கள், யோகா பயிற்​சி​கள் எல்​லாம் ஏன் தரு​கி​றார்​கள்? மனதை நிர்​ம​ல​மாய் சந்​தோ​ஷ​மாய் வைத்து நோய் நொடி​யில்​லா​மல் வாழத்​தானே ? நீங்​க​ளும் உங்​க​ளுக்​குத் தெரிந்த பிடித்த பணி​யைச் சமு​தா​யத்​திற்​குச் செய்​யுங்​கள். நாம் எல்​லா​ரும் தன்​ன​ல​மற்ற தொண்டு செய்​வோம்'' என்​றார் கணே​சன்.

அதற்கு ராம​நா​தன், ""ஓர் இரு​பது வரு​ஷங்​கள் முன்​னாலே ஒரு முத்தை தூக்கி போட்டு விட்டேன்; ஆத​லால் தான் கட​வுள் என் பையனை என்​னி​டம் இருந்து பிரித்து விட்டார். இதற்கு மேல் எது​வும் கேட்கா​தீர்​கள்'' என்று சென்று விட்டார்.

அப்​போது அங்கே வந்த சுனிதா வைதே​கி​யைப் பார்த்து, ""மாமி ! உங்​க​ளுக்கு காலில் ஏதோ சுளுக்கு பிடிச்​சி​ருக்​காம்... எண்​ணெய் கொண்டு வந்​துள்​ளேன், காட்டுங்​கள்'' என்​றாள் அன்​பு​டன்.

""நல்​ல​ôயி​டுத்து கண்ணு'' என்​றாள் வைதேகி.""அதில்லை அம்மா... நீங்க சுகர் பேஷன்ட் , உங்​களை நன்​றா​கக் கவ​னித்து கொள்​ள​ணும் என்று உங்க மகள் ரமா​வின் ஆர்​டர்'' என்​றாள், சிரித்​த​படி. அவள் சென்ற பின் சுனிதா எம். பி. ஏ. படித்த திரு​நங்கை என்​றும், தாய் தந்​தை​யி​னால் கை வி​டப்​பட்டு ஏதோ அநாதை இல்​லத்​தில் வளர்ந்​த​வள் என்​றும் ரமா வேலை தந்து இங்கே தங்க வைத்​துக் கொண்​டாள் என்​றும் எல்​லா​ருக்​கும் தெரிந்​தது.

""அப்ப ரமா... இந்த காலத்​தில் இவ்​வ​ளவு அன்​பாய், வெகு​ளி​யாய் இருக்​கி​றாள்... அவள் வாழ்க்கை எப்​படி ?''

சந்​தே​கத்​து​டன் கேட்டார் கணே​சன். அதற்கு கிருஷ்​ண​காந்த், ""நானும் ரமா​வின் அப்பா நட​ரா​ஜ​னும் திருப்​ப​தி​யில் ஒன்​றா​கப் படித்த நல்ல நண்​பர்​கள். அவள் திரு​ம​ணம் ஆகி நார்த்​தில் ஆபீ​சராக வேலை பார்த்​தாள். அதற்​கி​டை​யில் அவ புரு​ஷன் திருச்சிக்காரர். ஒரு சாடிஸ்ட். முது​மை​யில் என் நண்​பர் இறந்த பிறகு அவ​ளை​யும், அவள் தாயை​யும் வார்த்​தை​க​ளால் கொடு​மைப்​ப​டுத்தி அவளை மன​த​ள​வில் நோக​டித்​த​வன். தாய் இறந்த பிறகு ஒரே பிள்​ளை​யைக் கஷ்​டப்​பட்டு படிக்க வைத்து டாக்​ட​ராக்கி அமெ​ரிக்​கா​விற்கு போன மாதம்​தான் எம். எஸ். படிக்க அனுப்பி உள்​ளாள். அம்மா, அப்​பா​வின் மர​ணம் ரமாவை மான​சீ​க​மாய் பாதித்​தது. புரு​ஷன் அவ​ளைச் சரி​யா​கப் பார்த்​துக் கொள்​ள​வில்லை. பணி​யில் இருந்து ஒய்வு பெற்ற பின் தான் இங்கு வந்​தாள். புரு​ஷன் ஓர் விபத்​தில் போய் விட்டான். காலை​யி​லி​ருந்து ராத்​திரி வரை நம்ப சந்​தோ​ஷத்​தில் தன் சந்​தோ​ஷத்​தை​யும் சேர்த்து, மறைந்த தாய் தந்​தையை நம்​மில் பார்த்து மகிழ்ந்து வாழ்​கி​றாள்'' என்​றாள் திரு​மதி கிருஷ்​ண​காந்த்.

மேலும், ""அவங்க தாத்தா ஜக​திஸ் அய்​யர் ஒரு பெய​ருள்ள கிரி​மி​னல் லாயர். அந்த நாளிலே புரட்​சியை விரும்பி தன் மக​ளுக்கு தாராபாய் என்று பெயர் வைத்து படிக்க வைத்​த​வர். இந்த ஆஸ்​ர​மத்தை அவர் பெய​ரில் தான் வைத்​தார்​கள்'' என்​றார்.

"ஒரு நாள் தனக்கு வேலை இருக்​கி​றது' என்று ரமா​வி​டம் கூறி காலை​யில் புறப்​பட்​டுச் சென்று விட்டார் வைத்​திய நாதன். ரமா பிடி​வா​த​மாய் தன் காரில் டிரை​வ​ரி​டம் சொல்லி அவ​ரைக் கொண்டு போய் விடச் செய்​தாள். மாலை லேட்டாய் திரும்பி வந்​த​வர், "உணவு வேண்​டாம்' எனச் சொல்லி அறைக்​குச் சென்​றார். ரமா தன் அசிஸ்​டன்ட் சுரே​ஷு​டன் பணிப்​பெண் தேவி​யு​டன் உள்ளே சென்​றாள்.

""என்ன அப்பா, உடம்பு சரி​யில்​லையா ? சாப்​பி​ட​வில்​லை​யாமே, வாங்க லான்ல போய் காத்​தோட்​ட​மாய் உட்கா​ர​லாம்'' என்று அவரை அன்​போடு கூட்டிச் சென்​றாள். அவரை அங்கு உட்கார வைத்து, தேவி​யி​டம், ""அவ​ருக்கு பிடித்த அத​ரக் சாய் (இஞ்சி போட்ட டீ) கொண்டு வா...'' என்​றாள்.

""சரி மேடம்'' என்று அவள் சமை​யல் அறைப் பக்​கம் சென்​றாள். அப்​போது அங்கே வந்த சுனிதா உள்ளே சென்று தேவி கையில் இருந்த டீ யை வாங்கி அவ​ருக்​குக் கொடுத்​தாள்.

""சுரேஷ்... நீ ஆ​பீஸ் ரூம்ல இரு, நான் வர்​றேன்'' என்​றாள். அவன் போய் விட்டான். அதற்​குள் கிருஷ்ண காந்​து​டன், கணே​ஷன்​ராம், ராம​நா​தன் மற்​றும் இரு​வர் வந்​த​னர். கிருஷ்ணகாந்த் அவர் தோளில் கை போட்டு உரி​மை​யு​டன் அன்​பாக கேட்டார்: ""மக​ளைப் பார்த்​தாயா?'' என்று.

""ஆமாம் டா கி​ருஷ்ணா'' என்று கூறி​ய​படி அவர் கிருஷ்​ண​காந்த்தை தழு​விக் கொண்டு அழு​தார். அதற்கு கிருஷ்​ண​காந்த், ""கவ​லைப்​ப​டாதே , மனம் வருந்​தி​னால் பாவம் கழிக்​கப்​ப​டும். சின்​ன​வ​ளா​னா​லும் அவள் உன்னை மன்​னிப்​பாள் இப்​போது அவள் நடக்​கும் மனி​த​தெய்​வம். நம்​மைப்​போல் இல்லை'' என்​றார். யாருக்​கும் எது​வும் புரி​ய​வில்லை... ரமாவை தவிர.

எப்​ப​வும் யாரி​ட​மும் மனம் விட்டு பேசாத ராம​நா​தன், அவர் மேல் கை போட்டு, ""என்​னாச்சு வைத்யா ?'' என்​றார் கவ​லை​யு​டன். அவ்​வ​ளவு தான். வைத்யா உடனே, ""நான் ஒரு பாவி ராம​னாதா... மகா​பாவி, செல்​வந்​த​னான சம​ணன் எனக்கு ராஜஸ்​தா​னில் பத்து கல்​லூ​ரி​கள் பல சொத்​துக்​கள் உள்​ளன. எங்​கள் காலே​ஜில் என் மகள் பி.காம் படிக்​கும் போது ஒரு எம். காம் படிக்​கும் ராஜ​பூத் பையனை விரும்​பி​னாள். நான்​தான் மகா பாவி'' என்று மேலே சொல்ல முடி​யா​மல் விசும்​பி​னார்.

அப்​போது ரமா, ""அவனை காலே​ஜில் இருந்து அடித்து துரத்தி தன் மகளை ஜைன துறவி ஆக்கி விட்டார். அந்த பெண் நிர்​மலா அந்த விழா​வில் துற​வறம் பூண்​டாள். என் முன்​னாலே அவ​ளின் தலை​யி​லி​ருந்து ஒவ்​வொரு முடி​யை​யும் பிய்ச்சு , மொட்டை அடித்து துற​வி​யாக்​கி​னார்​கள். நான் அழு​த​படி தனி​யாய் கேட்டேன்..."​எப்​படி ஒத்​து​கொண்டே நிர்​மலா?' என்று. அதற்கு அவள், ""இப்ப எனக்​கும் சிலைக்​கும் எந்த வித்​யா​சமும் கிடை​யாது. நான் ஓர் நட​மா​டும் சிலை'' என்​றாள், சல​ன​மில்​லா​மல் புன்​மு​று​வ​லு​டன். அந்த நாள் என்​முன் அப்​ப​டியே நினை​வில் உள்​ளது'' என்​றாள் ரமா கண்ணை துடைத்​த​படி.

கிருஷ்​ண​காந்த், ""பிறகு கெஜெட்​டில் ரிஷப் நாத் என்ற பெயரை வைத்​ய​நா​தன் என்று மாற்றி கொண்டு தென்​னிந்​தி​யா​வில் பெரிய தொழில் அதி​ப​ராய் செட்டில் ஆகி, மனைவி மறை​வுக்​குப் பின் இங்கே வந்து விட்டார்'' என்​றார். ""இன்று ஜைனர் கோயி​லுக்கு துறவி நிர்​மலா தேவி வந்​துள்​ளார். அவ​ளைப் பார்த்து வணங்கி மன்​னிப்பு கேட்டா​ராம்'' என்​றார் வருத்​த​து​டன். ரமா வைத்​ய​னா​தரை பார்த்து, ""இத பாருங்க அப்பா , இப்ப நீங்​கள் அவள் தந்தை இல்லை, அவள் மக​ளும் இல்லை. ஒரு துறவி. உல​கத்​திற்கு ஞான​த​ரும் சுடர் , தெய்​வீ​கப் பிறவி , பழசை தயவு செய்து மறந்து விடுங்​கள்'' என்​றாள்.

அவர், "" எப்​படி மறக்க முடி​யும் ரமா'' என்​றார் வருத்​த​து​டன்.

எப்​போ​தும் அமை​தியாய் இருக்​கும் ராம​நா​தன், ""வைத்தி, உன்​னை​விட பாவி நான் தான். எனக்கு இரண்டு குழந்​தை​கள். முத​லா​வது மகன். இரண்​டா​வது ஆணும் இல்லை பெண்​ணும் இல்​லா​மல் பிறந்​தது. அந்த சிறு குழந்​தையை இரக்​க​மில்​லா​மல் சென்​னை​யில் ஓர் அநாதை விடு​தி​யில் வைத்து விட்டு வந்து விட்டேன். சாகும் வரை அதைப் பற்றி பேசி பேசி கண் கலங்​கி​னாள் என் மனைவி. ஆத​லால் தான் என் ஒரு பிள்​ளை​யும் என்னை அநா​தை​யை​போல் வீசி எறிந்​து​விட்டு போய் விட்டான்'' என்​றார் வருத்​த​து​டன்.

""உங்க குழந்தை உங்​கள் முன்​னாலே அப்பா அப்​பா​வென்று கூப்​பிட்டு கொண்டே அத்​தனை பணி​க​ளை​யும் செய்து, படுக்​கும் வரை குட்நைட் சொல்லி தூங்​கச் செய்​யும்​போது , நீங்​கள் எப்​படி அநாதை ஆவீங்க அப்பா ?'' என்று கேட்டாள் ரமா.

""என்​னம்மா சொல்றே ?'' வியப்​பு​டன் கேட்டார் ராம​நா​தன்.

""நீங்​கள் இங்கு சேர்ந்​த​போதே நான் உங்​க​ளைப் பற்றி எல்லா விவ​ரங்​க​ளை​யும் அறிந்து கொண்​டேன். எம்​பிஏ படித்து சுய​ந​ல​மில்​லா​மல் அன்​போடு எல்​லோ​ருக்​கும் சிரித்த முகத்​து​டன் தொண்டு செய்​யும் சுனிதா தான் இங்​குள்ள எல்​லா​ரின் செல்ல மகள், நீங்க தூக்கி எறிந்த மழ​லைச் செல்​வம்'' என்​றாள்.

சுனிதாவை அரு​கில் அழைத்து, ""இவர் உன் அப்பா'' என்​றாள். அவள் ராம​நா​தன் அரு​கில் சென்று, ""அப்பா'' வென்று விசும்​பி​னாள்.

""தாயே ! என்னை மன்​னித்து விடு. உனக்கு துரோ​கம் செய்து விட்டேன். என்னை மன்​னித்து விடு. ஆண் என்ன? பெண் என்ன? எல்​லா​ரும் மனி​தர்​களே. அன்பு செலுத்​தி​னால் அன்பு எல்​லோ​ருக்​கும் கிடைக்​கும். இந்த உண்​மையை வாழ்க்​கை​யின் கடைசி நேரத்​தி​லா​வது உணர்ந்​தேனே... இனிமே நான் நிம்​ம​தி​யாய் சாவேன்'' என்​றார் அழு​த​படி.

அதற்கு ரமா, ""நீங்​கள் எல்​லா​ரும் அந்​தி​பூக்​கள். வாழ்க்​கை​யின் அனு​ப​வத்​தில் பூத்த மல்​லி​கள். எங்​கள் எல்​லா​ருக்​கும் வழி காட்டி​கள். நீங்​களே வருத்​தப்​பட்​டால் எப்​படி? வாருங்​கள், உண​வ​ருந்தி பிரார்த்​தனை செய்துவிட்டு உறங்​க​லாம். சொல்​லுங்​கள் மாமி'' என்​றாள் சுசீலா மாமி​யைப் பார்த்து.

உணவு அருந்​திய பிறகு ராம​நா​த​னுக்கு ஒரு போன் வந்​தது. அதில் பேசி விட்டு வந்து சொன்​னார்: ""என் பையன் அமெ​ரிக்கா போக​வில்​லை​யாம். கரோனா வைரஸ் பிரச்​னை​யால் விசா கிடைக்​க​வில்​லை​யாம். என்​னைக் கூட்டி போவ​தாக சொன்​னான்'' என்​றார்.

""கணே​ஷன் அப்ப நீ என்ன சொன்னே?'' என்று கேட்டார்.

அதற்கு அவர் வைரஸ் பல நூறு வரு​ஷங்​கள் முன்னே இயற்​கை​யில் எப்​போ​தும் இருப்​பவை. சுனாமி என்​றோம்... நிஷா என்​றோம்... ராவ​ணன்,

ஹிரன்​ய​கஷ்​ய​பன் என்​றோம். வைரஸ் நல்ல திட​மான உடம்​பில் ஒட்டாது. நான் இந்த சுவர்க்​கத்தை விட்டு வர​மாட்​டேன். வைரஸ் பிரச்னை தீர்ந்​த​வு​டன் நீ அ​மெ​ரிக்கா போ கண்ணா என்று வாழ்த்தி அனுப்​பி​னேன்'' என்​றார். எல்​லா​ரும் சிரித்​த​படி பிரார்த்​தனை ஹாலுக்​குச் சென்று அங்கு ஜக​ஜோ​தி​யாய் ஒளிர் வீசும் ஸ்ரீ வேங்​க​டா​ச​ல​ப​தி​யைக் கை கூப்பி வணங்​கி​னார்​கள்.

"குறை ஒன்​றும் இல்லை... மறை மூர்த்தி கண்ணா' என்ற எம். எஸ் பாட​லும், அதற்​குப் பிறகு, "இறை​வ​னி​டம் கை ஏந்​துங்​கள்' என்ற ஹனீபா பாட​லும் இனி​தாக காதில் ஒலித்​தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com