கரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், எனக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது. நகரப் பேருந்துகள் ஓடாத காரணத்தினாலும், இரு சக்கர வாகனம் என்னிடம் இல்லாததாலும், என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் வேலையும் போய், சம்பளமும் இல்லாமல் என் குடும்பமே வறுமையில் வாடுவதை எண்ணி என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. நான் மன தைரியம் பெற என்ன வழி?
சிவகுமார், ஆவடி, சென்னை.
மனிதர்களுக்கு மிகுந்த வேதனையை இந்தக் கரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கஷ்டமான நிலையில் அரசு அறிவித்து இருக்கும் உதவிகளைப் பெறுவதோடு, பருவகாலத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் சிறு தொழிலை நண்பர்கள் அல்லது உறவினர்கள் வழியாக, ஒரு சிறு தொகையைக் கடனாகப் பெற்று தொடங்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
சரக சம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் மனிதர்களுக்கு மூன்று வகையான ஆசைகள் இருக்க வேண்டும் என்றும், அதனால் நல்வழியை அடைந்து முக்தி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு ப்ராண ஏஷணா, தன ஏஷணா மற்றும் பரலோக ஏஷணா என்று பெயர்.
ப்ராண ஏஷனா என்றால் உயிரைக் காத்துக் கொள்வது. உயிர் இருந்தால்தான் எதையும் சாதித்துக் கொள்ள முடியும். அதற்கு ஆரோக்கியமும், நோயைக் குணப்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டுவதுமாகும். இவை இரண்டும் தனிமனிதனின் உடல்சார்ந்து மாறுபடும் என்பதால், அவற்றை விளக்கத் துணிவு நமக்கு இல்லை.
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை... அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை' என்ற கூற்றிற்கு ஏற்ப, இரண்டாவதும் மூன்றாவதுமாகிய தன ஏஷணா மற்றும் பரலோக ஏஷணாவிற்கான அறிவுரைகளை சரகர் விரிவாக எடுத்துரைக்கிறார். நீண்ட ஆயுளிருந்தும் வறுமையில் உழன்றால், அதைவிடக் கொடியது எதுவுமில்லை எனக் கூறும் அவர், நல்லோர்களால் பாராட்டப்படும் தொழில்களாகிய விவசாயம், பசுபரிபாலனம், வியாபாரம் மற்றும் அரசாங்க வேலைகளை முன் மொழிகிறார். இவை அனைத்தும் தர்மத்தைச் சார்ந்தே செய்யப்பட வேண்டும். இதனால் தன்னலமும் பிறர்நலனும் பாதுகாக்கப்படும்.
பரலோக ஏஷணம் என்பது தன் உடல்சார்ந்த ஆத்ம ஞானத்தைப் பெறுவதாகும். மகா மாயையினால் இதை எளிதில் காண முடியாது. பஞ்ச பூதங்களாலும், மனமும், ஆன்மாவும் ஒன்றிணைந்த மனிதக் கூட்டில், ஆன்மாவானது மனம் வழியாகச் செயலாற்றுவதால், நன்மை, தீமைகளை புத்தியின் விவேக சக்தியால் நன்கறிந்து, நல்வழியில் நடப்பவர்களுக்கு ஏற்படும் கர்ம பலனால் இறப்பிற்குப் பிறகு, சூட்சுமமான மனதில் பொதிந்த அந்த கர்மாக்களின் நற்பயனாக ஆன்மாவானது வேறு ஒரு புதிய உடலை அடைந்து நல்ல வம்சாவழியைச் சார்ந்த குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, மேன்மேலும் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டு, இறுதியில் மானிடப் பிறவியை முற்றிலுமாகத் துறந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது. சத்வம் எனும் மனோகுணத்தின் பூரண வளர்ச்சியானாலும் , மனதின் ரஜ - தமோ தோஷங்களின் பூரண நீக்கத்தாலும் இது சாத்தியமாகும் என்கிறார் சரகர்.
மனம் துவண்டுள்ள தங்களுக்கு, அலுவலகத்தில் நீங்கள் நன்கறிந்த விஷயங்களையே மனதில் கொண்டு வந்து, அதையே சுய தொழிலாகச் செய்ய முடியுமா என்று எண்ணிப் பார்த்து, நடைமுறைப்படுத்தி முயற்சி செய்வதன் மூலமாகவும், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
கல்யாணகிருதம், பஞ்சகவ்யகிருதம், மானஸமித்ரம் குளிகை போன்ற ஆயுர்வேத மருந்துகள் மனதை அமைதியுறச் செய்யும் சிறந்த மருந்துகளாகும். மனம் சார்ந்த உபாதைகளையும் நீக்க வல்லவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


