விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆக்ஷன் ரிப்போர்ட்டர் - மதன், கார்ட்டூனிஸ்ட்

ஒரு பத்திரிகையாளருக்கு - குறிப்பாக நிருபருக்கு மற்ற வேலைகள் எல்லாம் பிற்பாடுதான். முதல் வேலை செய்தி சேகரிப்பதுவே!

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

ஒரு பத்திரிகையாளருக்கு - குறிப்பாக நிருபருக்கு மற்ற வேலைகள் எல்லாம் பிற்பாடுதான். முதல் வேலை செய்தி சேகரிப்பதுவே! அதாவது ஒரு நிருபர் பேருந்தில் சொந்த வேலையாகப் பயணம் செய்து கொண்டிருக்கும்போது- வழியில் ஏதேனும் கூட்டம் அல்லது சலசலப்பு- ஏதோ முக்கியமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுபோலத் தோன்றினால் கூட- உடனே கீழே குதித்துவிட வேண்டும் (அடுத்த பேருந்து நிறுத்தத்தில்தான்).

யார் கண்டது? கார் கதவு திடீரென்று திறந்து கொண்டு ஒரு தலைவர் நடைபாதையில் கீழே விழுந்து அடிபட்டிருக்கக் கூடும்! (இதெல்லாம் நல்ல விஷயங்கள் இல்லையா?) சுதாங்கன் அப்படித்தான்; செய்திதான் அவருக்கு முதலில்!

சுதாங்கன் ஒரு சிறந்த பத்திரிகையாளராக திகழ்ந்ததற்கு இன்னொரு காரணம் உண்டு. வி.ஜ.பிக்களின் குடும்பத்தோடும் அவர் நெருங்கிப் பழகிவிடுவார்.

தலைவர்களின் மனைவி, மகன், மகள்களுடன் இயல்பாகப் பழகும் குணமும் அவரிடம் இருந்தது. தலைவர் கட்சியை விட்டு மாறப் போகிறார் என்கிற பரபரப்பான செய்தி யாருக்கு முதலில் தெரியும்? தலைவரின் மனைவிக்குத்தானே? ஆகவே முதல் நியூஸ் சுதாங்கனுக்குத்தான் கிடைக்கும்.

சுதாங்கன் நிருபர்களில் ஒரு கமாண்டர் இன் சீஃப். மற்ற நிருபர்கள் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வதைத்தான் செய்ய முடியும். அவரும் தாராளமான மனதோடு அவற்றைச் சொல்லித் தருவார்.

Story image

சுதாங்கன் (ஜேம்ஸ்பாண்ட் மாதிரி) ஓர் ஆக்ஷன் ரிப்போர்ட்டர். அறுபதுக்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை தமிழக எல்லை தாண்டிச் சென்று மீட்டுக் கொண்டு வந்தவர் அவர். கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே முன் எச்சரிக்கையாக ஜீப்புகளில் ஒரு போலீஸ் பட்டாளத்தையே அழைத்துக் கொண்டுசென்றார். அவரும் ஜீப்பில்!

கொத்தடிமைகள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் என்றால், அதே சமயம் ஓர் அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த- சென்னையிலிருந்து பீகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட- ஓர் இளம்பெண்ணையும் அவர் மீட்டுக் கொண்டு வந்ததுண்டு!

என்னை விட இளமையானவர் சுதாங்கன். நூறாண்டுகள் வாழ வேண்டியவர் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நம்மை விட்டுப் போய்விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.