மைக்ரோ கதை
By DIN | Published On : 01st March 2020 12:02 PM | Last Updated : 01st March 2020 12:02 PM | அ+அ அ- |

மேசையின் மீது இருந்த ஆப்பிளை எடுத்துக் கொள்ள மூன்று குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த அவர்களின் அம்மா, "உங்களில் யார் எனக்கு அதிக மரியாதை தர்றீங்களோ... யார் எனக்குப் பயப்படுறீங்களோ... யார் எனக்குக் கீழ்ப் படிந்து நடக்குறீங்களோ? அவுங்க இந்த ஆப்பிளை எடுத்துக்கலாம்'' என்றாள்.
குழந்தைகள் எல்லாரும் அந்த ரூமிலிருந்து வேகமாக அடுத்த ரூமுக்குச் சென்றனர். அங்கு இருந்த அப்பாவிடம் சொன்னார்கள்: "அப்பா அந்த மேசையில் உங்களுக்கு ஆப்பிள் இருக்கு.
எடுத்துக்கங்க'' என்றனர்.
பால.கிருஷ்ணமூர்த்தி,
கும்பகோணம்.