நீல நிற வாழைப்பழம் !

ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் மோரிஸ், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, நாட்டு வாழைப்பழம், பூவன்பழம், செவ்வாழை என்று பலவகைகள் இருந்தாலும், நீல நிறத்தில் உள்ள நீல வாழைப்பழம் வைரல் ஆகியிருக்கிறது.
நீல நிற வாழைப்பழம் !
Published on
Updated on
1 min read


ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் மோரிஸ், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, நாட்டு வாழைப்பழம், பூவன்பழம், செவ்வாழை என்று பலவகைகள் இருந்தாலும், ஐஸ்கிரீம் சுவையுடன் நீல நிறத்தில் உள்ள நீல வாழைப்பழத்தின் செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

நீல வாழைப்பழத்தின் உண்மைப் பெயர் "ப்ளூ ஜாவா' என்பதாகும்.

எல்லா வாழைப்பழ வகைகளின் தோலை உரித்தால் உள்ளே தந்தநிறத்தில் அல்லது இள மஞ்சள் நிறத்தில் பழம் இருக்கும்.

"ப்ளூ ஜாவா' வாழைப்பழத்தின் தோல் மட்டுமல்ல, உள்ளே இருக்கும் பழமும் நீல நிறத்தில் இருப்பதுதான் இந்த நீலப்பழத்தின் சிறப்பு. இந்த நீல வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது வெனிலா ஐஸ்கிரீம் சுவையுடன் மிக மென்மையாகவும் இருக்குமாம். ஐஸ்கிரீம் கலந்து "டெஸர்ட்'டாக செய்து சாப்பிட்டால் சுவை சுண்டி இழுக்குமாம்!

நீல வாழைப்பழங்கள் எல்லா நாடுகளிலும் எல்லா நிலப்பகுதிகளில் வளர்வதில்லை. ஹவாய் தீவிலும், தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் வளர்கிறது.

"மூஸா பால்பிசியானா', "மூஸா அக்யூமினாட்டா' என்ற இரண்டு இன வாழைகளின் மரபு அணுக்களை சேர்க்கப்பட்ட கலப்பினம்தான் நீல வாழை. இந்த வாழை அதிக குளிர் பிரதேசங்களிலும் வளருமாம்.

இதர வாழைப்பழங்கள் போல நீல வாழையில் வைட்டமின்கள் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, இதர விட்டமின்களும் உள்ளன. உபரியாக, இரும்புச் சத்தும், பாஸ்பரஸ், தியாமின், செலினியம் போன்ற தாதுக்களும் இருக்கிறது. மூளைத் திறனை அதிகரிக்கும் பொட்டாசியம் நீல வாழைப்பழத்தில் நிறைய இருப்பதால், தினமும் நீல வாழையை உண்டு வந்தால் மூளையின் இயக்கத்தை அதிகப்படுத்தலாம்.

நீல வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அது மனதை அமைதியாக வைப்பதுடன் நரம்புகளுக்கும், இதயத்திற்கும் வலுவினை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நீல வாழைமரம் 15 முதல் 20 அடி உயரம் வரை வளரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com