சிரி... சிரி... 

""என் பொண்டாட்டி உடம்புல ஒரு பேய் இறங்கிடிச்சாம்?''""பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க''
சிரி... சிரி... 

""அவன் பாட்டுக்கு உன்னை சகட்டுமேனிக்குத் திட்டிட்டுப் போறான்,
நீ ஏன் கம்முனு வர்றே?''
""தெரியாத்தனமா கடனை கொடுத்தாச்சு; திருப்பி வாங்கற வரைக்கும்
எவ்வளவு அவமானப் படுத்தினாலும் கம்முனுதான் இருந்தாகணும்!''

 

""என் பொண்டாட்டி உடம்புல ஒரு பேய் இறங்கிடிச்சாம்?''
""பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க''

""நான் ஜோக்ஸ், கதைன்னு எது எழுதினாலும் முதல்ல என் மனைவி கிட்டதான் காட்டுவேன்!''
""அவுங்க படிச்சிட்டு, நல்லா இருக்குன்னா மட்டும் அனுப்புவீங்களாக்கும்?''
""இல்ல அவ படிச்சிட்டு நல்லா இல்லைன்னு சொல்றதை மட்டும் அனுப்புவேன்பிரசுரமாயிடும்!''


ஒருத்தர்: ஒரு பேய் என்னை மிரட்டிக்கிட்டே இருக்கு சாமி ?
மாந்திரிகர்: குடும்பப் பிரச்னைக்கெல்லாம் என்னால ஒண்ணும் செய்ய முடியாதுப்பா.

""பள்ளிக்கூடம் போகும் போது என்னை நாய் கடிச்சிடுச்சிடா''
""அதை ஸ்கூலுக்கு கூப்பிட்டியா ?''


""எப்படிய்யா இவ்வளவு கூட்டத்தை சேர்த்தே?''
""அநேகமா தலைவர் வரமாட்டாரு வந்தாலும் பேச மாட்டாருன்னு சொல்லி, அழைச்சிட்டு வந்திருக்கேன் தலைவா !''


""கையூட்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்; பையூட்டுன்னா என்னங்க?''
""சம்திங்கை ஷர்ட் பாக்கெட்லயே வச்சிடுவாங்க!''

- வி. ரேவதி, தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com