திரைக் கதிர்

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார் அமலா பால்.
திரைக் கதிர்

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார் அமலா பால். அதோடு பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் நிறைய பூனைகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்.

----------------------------------------------------------------------------------

"கேஜிஎப்' பட இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாûஸ வைத்து "சலார்' என்ற படத்தை இயக்கி  வருகிறார். இப்படத்தில் ஹிந்தி திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்திருந்தார்கள். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை  ஸ்ருதிஹாசன் கைப்பற்றியுள்ளார்.

----------------------------------------------------------------------------------

நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதற்கு சில மணி நேரத்தில் லட்சங்களில் லைக்ஸ் கிடைத்துள்ளன. அதோடு பல அதிரடியான கருத்துகளையும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

----------------------------------------------------------------------------------

குலேபகாவலி' பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு பிரபுதேவா ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

----------------------------------------------------------------------------------

 
விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படம் "சக்ரா'. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்,  ஓடிடி தளத்தில் வெளியிட  இருந்த விஷால், தற்போது திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார். 

----------------------------------------------------------------------------------

லுங்கு சினிமாவின் தற்போதைய முன்னணி இடத்தில் இருக்கிறார் ராஷ்மிகா 
மந்தனா தமிழில் கார்த்தியுடன் "சுல்தான்' படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் "புஷ்பா' படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யவுள்ளார்கள்.

----------------------------------------------------------------------------------

தெலுங்கில் குணசேகரன்  இயக்கத்தில் "சகுந்தலா' என்ற படத்தில் நடிக்கிறார் சமந்தா. சகுந்தலாவின் காதலராக மலையாள நடிகர் மஹா தேவ் மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

----------------------------------------------------------------------------------

கேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் "சர்க்காரு வாரிபாட்டா'. இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. துபைக்கு விமானத்தில் செல்லும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

----------------------------------------------------------------------------------

அந்தாதுன்' படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கிறார்.

----------------------------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com