

கடந்த 2015 - ஆம் ஆண்டு என் பித்தப்பையில் கற்கள் இருப்பதாகக் கூறி எடுத்துவிட்டனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுநாள் சிறிது காரமான உணவு சாப்பிட்டுவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நெஞ்செரிச்சல் ஏற்பட்டு சரி வர சாப்பிட முடியவில்லை. இதை எப்படிக் குணப்படுத்துவது?
மஞ்சுளா, பிருந்தாவனம்.
பட்டினி விரதமிருப்பவர்கள் மறுநாள் கசப்பானஅகத்திக் கீரை, தேங்காய், வெள்ளரிக்காய் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட்டு, வயிற்றிலுள்ள அமிலச் சுரப்பை அதிகப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதே நலம். கசப்பும் துவர்ப்பும் அமிலச் சுரப்பை நன்கு அடக்குபவை. பித்த சீற்றமானது தன் குணங்களாகிய ஊடுருவும் தன்மை, சூடு, திரவம் போன்றவற்றால் புளி, உப்பு, காரம் அதிகம் சாப்பிடும் நபர்களின் குடலைப் பாழாக்கி விடும் தன்மையுடையவை.
எரிச்சலை ஏற்படுத்தும் பித்தத்தை, அவிபத்தி சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை சுமார் 10 கிராம் எடுத்து அதில் 20 மி.லி. தேன் குழைத்து மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டு, நீர் பேதி மூலம் முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். பத்துநாள்களுக்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. அதன் பிறகு, சங்கு பற்பம் எனும் பஸ்ம மருந்தை, சிறிது தேன், நெய் விட்டுக் குழைத்து, காலை, மதியம், இரவு என உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிடலாம். இரண்டு கிராம் பற்பத்தில் 3 மி.லி. தேனும், 2 மி.லி. உருக்கிய நெய்யும் விட்டுக் குழைத்து, நக்கிச் சாப்பிடுதல் அவசியமாகும்.
ACIDACT என்ற பெயரில் வெளியாகும் ஆயுர்வேத மாத்திரையை, இரவு உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன், தண்ணீருடன் சாப்பிடலாம்.
சாதாரண தண்ணீர் அருந்துவதை விட, மண் பானைத் தண்ணீரில் ஊற வைக்கப்படும் வெட்டிவேர், குடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் என்பதால், அந்தத் தண்ணீரை ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக அருந்தலாம்.
வாத - பித்த - கபங்களின் சமநிலையே ஆரோக்கியம். அவற்றில் ஏற்படும் உயர்வும் - தாழ்வும் நோயாக மாறுகின்றன.
அவற்றின் சமநிலையைக் காப்பதே ஆரோக்கியத்தின் அடிப்படை ரகசிய
மாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.