சிரி... சிரி...
By DIN | Published On : 21st March 2021 06:00 AM | Last Updated : 21st March 2021 06:00 AM | அ+அ அ- |

""வாட்சாப் குரூப்புலேயும் அரசியல் புகுந்துடுச்சு!''
""எப்படி சொல்றீங்க?''
""ஒரு குரூப்புல உள்ள அதிருப்தியாளர்கள், மற்ற குருப்புல போய் சேர்ந்துடறாங்களே''
""அந்த ஜோசியர் கிட்ட அரசியல்வாதிகள் கூட்டம் அதிகமா இருக்கே ஏன்?''
""நாம விரும்புற கூட்டணி ஏற்பட தாயத்து மந்திரிச்சி தர்றாராம்''
பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
""அந்த டாக்டர் கிட்ட எது கேட்டாலும் கோபப்பட மாட்டார்னு சொன்னீங்களே?''
""அதுக்காக உங்களை யாரு கடன் கேட்கச் சொன்னது?''
""அந்த ஆஸ்பத்திரியில இப்பத்தான் கேன்டீன் திறக்கறாங்களா?''
""ஆமா... பேஷண்ட் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சதும், இந்த ஐடியாவுல இறங்கிட்டாங்க!''

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...