பேல்பூரி

கருப்பை இல்லா மரத்திற்காக,எப்போதும் விதைகளைச் சுமக்கிறது வாடகைத் தாயாய் இம்மண்...
பேல்பூரி

கண்டது

(மொரப்பூர்-கல்லாவி சாலையில் உள்ளஓர் ஊரின் பெயர்)

கழுதைப்பட்டி

ப நரசிம்மன், தருமபுரி.

(திருவாரூர் மாவட்டம், தொண்டையக்காட்டில் இருக்கும் ஓர் அக்ரோ சென்டரின் பெயர்)


அக்ரி கிளினிக்

ஜி. அழகிரிவேல், ஒதியடிக்காடு.

(வேதாரண்யம் பகுதியில் பெண்கள்தையற்கலைப் பயிற்சி நிலையத்தின் பெயர்)

பூவையர் பூமி

-எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.

கேட்டது

(தஞ்சாவூர் வாணக்காரத்தெரு அருகில்மளிகைக்கடை ஒன்றில் ஒரு பெண்மணியும், கடைக்காரரும்)

""இந்த முறை நான் யாருக்கும் ஓட்டுப் போடறதில்ல!''
""ஏம்மா?''
""மளிகைக்கடை கடனை
தள்ளுபடி பண்றேன்னு எந்தக் கட்சியும்
வாக்குறுதி தரலையே!''

- ராம்ஆதிநாராயணன்,
தஞ்சாவூர் -1

(பறக்கை பெருமாள் கோயில் வாசலில் இரு இளைஞர்கள்)

"" மாப்ளே, நீ எனக்கு 250 ரூபாய் தரணும். ஞாபகம் இருக்கா?''
""மறப்பேனா மச்சி... 250 ரூபாய்க்கு செக் எழுதிதர்றேன். நீ அக்கவுண்ட்ல போட்டு எடுத்துக்கோ''
"" உன் அக்கவுண்ட்ல 250 ரூபாய் இல்லைன்னு செக் ரிட்டர்ன் ஆகும். செக் பவுன்சிங் சார்ஜ் 500 ரூபாய் என் அக்கவுண்ட்டில் பிடிக்க வேண்டும்
என்பதுதானே உன் ஆசை. நீ 250 ரூபாய் தராவிட்டாலும் பரவாயில்லை. ஆளை விடு''.

சு.நாகராஜன்,
பறக்கை.

யோசிக்கிறாங்கப்பா!

கருப்பை இல்லா மரத்திற்காக,
எப்போதும் விதைகளைச் சுமக்கிறது வாடகைத் தாயாய் இம்மண்...

மு.கௌந்தி,
சென்னை-119.

மைக்ரோ கதை


ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, ""உனக்கு என்ன வேண்டும். அதைக் கேள்'' என்றது
""என் கணவர் முழிச்சிட்டு இருக்கும் போதெல்லாம் என் மேலே கண்ணாய் இருக்கணும்''
""அப்புறம்?''
""அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர எதுவுமே முக்கியமாக இருக்கக் கூடாது''
""அப்புறம்?''
""அவர் தூங்கும் போது நான் பக்கத்தில் இல்லாமல் தூங்கக் கூடாது''
""அப்புறம்?''
""அவர் காலையில் எழுந்திருக்கும் போது என் முகத்திலதான் முழிக்கணும்''
""அப்புறம் ?''
"" அவர் நான் இல்லாமல் எங்கேயும் போக கூடாது''
""அப்புறம்''
""என் மேல் ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்தில உறைஞ்சு
போயிடணும்''
""அப்புறம்?''
""அவ்வளவுதான்''
பூதம் அப்பெண்ணை ஸ்மார்ட்போனாகமாற்றியது.

எம் அசோக்ராஜா,
எஸ்எம்எஸ் பிளேடு

எஸ்.எம்.எஸ்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது டார்கஸ் நிறுவனம். இந்நிறுவனம் கம்ப்யூட்டரின் கீ போர்டு மற்றும் மவுûஸத் தூய்மைப்படுத்தும் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாம் கணினியில் வேலை செய்ய பயன்படுத்தும் கீ போர்டை, மவுûஸ ஏற்கெனவே உள்ள சானிட்டைசர்களை வைத்து, தூய்மையாக்க முடியாது. மின்சாரம் பயன்படுத்தப்படும் கருவிகளை இந்த சானிட்டைசர்களை வைத்துத் தூய்மையாக்கினால், தீ ப்பற்றிக் கொள்ளுதல் உட்பட பலவிதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

டார்கஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தக் கருவி, புற ஊதாக் கதிர்களை வெளியிடுவதன் மூலம் கரோனா தீ நுண்மிகளை அழிக்கிறது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் தானாகவே இந்தக் கருவி கீ போர்டையும் மவுûஸயும் தூய்மையாக்கிவிடும். அதுமட்டுமல்ல, கணினியில் வேலை செய்து கொண்டு இருப்பவர் ஓர் ஐந்து நிமிடம் ஓய்வுக்காக வேலையை விட்டு எழுந்து சென்றால், அதை சென்சார் மூலம் கண்டறிந்து உடனே தூய்மைப்படுத்தும் பணியை இந்தக் கருவி தொடங்கிவிடும்.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com