திரைக்கதிர்
By - ஜி.அசோக் | Published On : 09th May 2021 06:00 AM | Last Updated : 09th May 2021 06:00 AM | அ+அ அ- |

அனுஷ்காவைப் பற்றி படச் செய்திகள் வருகிறதோ இல்லையோ, அவரது திருமணம் குறித்து தகவல் வந்துவிடுகிறது. அப்படி இப்போதும் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது நடிகை அனுஷ்கா துபையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அவருக்கு அனுஷ்காவை விட வயது குறைவு என்கிற தகவலே அது.
திருமணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் அனுஷ்கா தரப்பில் இருந்து வரவில்லை.
------------------------------------------------------------------------------------------------
தனுஷ் இப்போது பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டிலும் தனித்துவத்தை காட்ட முயன்று வருகிறார்.
""தி க்ரே மேன்'' என்கிற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் வெளிநாட்டுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவர் படப்பிடிப்புக்கு இடையே முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தும் வருகிறார். அப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. தற்போது நடுக்கடலில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவைப் போட்டோ எடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------
நடிகை சமீராரெட்டி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.
சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------------
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் "வலிமை'.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், அதன் படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது "வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.
அதில் "பொருளாதார சிக்கல்தான். ஆனால், அஜித் படம் ஓடிடி-க்கு சரிவருமா ?அஜித் படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிடும்போதுதான் அதற்கான வரவேற்பும், ரசிகர்களின் பேராதரவும் கிடைக்கும். அதனால் இப்போதைக்கு தியேட்டர் ரிலீஸ் மட்டுமே மனதில் இருக்கிறது' என கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.
------------------------------------------------------------------------------------------------
விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்' படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகியும் கூட பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான முகநூலில் விஜய் நடித்த "தெறி' படத்தின் காட்சி மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
ஆம், அப்படத்தின் காட்சியை இதுவரை 10 மில்லியன் நபர்கள் "லைக்' செய்துள்ளனர், இது வேறு எந்த ஒரு தமிழ் படக் காட்சியும் படைத்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------
பாலிவுட்டில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் "ஆர்ட்டிகிள் 15'.
"கனா" படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார் எனத்
தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கெனவே "கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.
"வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக விருந்த நிலையில், தற்போது பரவி வரும் கரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அஜித்தின் 61 - ஆவது படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், இப்படத்திற்காக அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.
மேலும் இப்படத்திற்காக அஜித் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.
இவருடன் இணைந்து அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி "தலைவி' வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.
இந்நிலையில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் "டிக்கு வெட்ஸ் ஷெரு' என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G