பேல்பூரி

""நீ செஞ்ச உதவிக்கு  உனக்கு  நன்றி சொல்ல என்கிட்ட வார்த்தைகளே  இல்லைடா...'' "'பரவாயில்லடா ... நோ தாங்கஸ்..'' ""வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா.. காபி... கீபி... எதுவும் கிடையாதா?''
பேல்பூரி

கண்டது


(நாமக்கல் அருகே  ஒரு ஊரின்  பெயர் )

ஒருவந்தூர்

 - ஆர். கே. லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்

(குன்றத்தூரில்  ஒரு தின்பண்டக் கடையின் பெயர்)

டும்பா- டும்பா

- கு.கோப்பெருந்தேவி

(மதுரை கீழமாரட் வீதியிலுள்ள ஆண்கள்   ஆடையகத்தின் பெயர்)

சொல்லமாட்டேன்

- மதுரை குழந்தைவேலு,
கோவிலாம்பாக்கம்.

கேட்டது

(பாளையங்கோட்டை  அரசு  மருத்துவமனை  அருகில்  இரு நண்பர்கள்)

""நீ செஞ்ச உதவிக்கு  உனக்கு  நன்றி சொல்ல என்கிட்ட வார்த்தைகளே  இல்லைடா...''
 "'பரவாயில்லடா ... நோ தாங்கஸ்..''
 ""வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா.. காபி... கீபி... எதுவும் கிடையாதா?''

 - எஸ்.சாய்கிருஷ்ணா,
திருநெல்வேலி.

(சிதம்பரம்  வண்டிக்காரத் தெருவில் இளைஞனும், முதியவர் ஒருவரும்)

""ஏன்டா அம்பி! ஹோட்டலேயே சாப்பிட்டுட்டு வரவேண்டியது தானே?
ஏதுக்கு பார்சல்  கட்டிட்டு வர...''
""ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர்  வரும்னு டாக்டர்  சொல்லியிருக்காரு தாத்தா, அதான்!''

- அ.ப.ஜெயபால்,  
சிதம்பரம். 


யோசிக்கிறாங்கப்பா!

வண்டி நாம் ஓட்டுகிற பாதையில்  ஓடும்...
வாழ்க்கை  அது போகிற பாதையில் நாம் போக வேண்டும்.

- ஜி. அமிர்தாதேவி,  
வாகைக்குளம். 

மைக்ரோ கதை


ஒரு பெண் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைப் பார்க்க அவளது பள்ளி நண்பன் வருகிறான்.
உடனே அந்தப் பெண் அவனிடம், ""நீ பாமுக் எழுதிய," அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?'' என்று கேட்கிறாள்.
உடனே அவன் அவளிடம், ""இல்ல நான் ஹும்ஸ் எழுதிய  "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ?
என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்'' என்கிறான்.
உடனே அவள், ""ஓ அது என்னிடம் இல்லை, அதனால் நீ... கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை வாங்கிக்கொள்'' என்கிறாள்.
உடனே அவன், ""நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா'' என்கிறான்.
உடனே அவள், நண்பனிடம்... ""பகத் எழுதிய  "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் கொண்டு வருகிறேன்'' என்கிறாள்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தை உடனே தன் மகளிடம், ""இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?'' என்று கேட்கிறார்.
உடனே அந்த பெண், ""ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்'' என்று கூறுகிறாள்.
உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..
""நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய  ""வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை'' என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு'' என்கிறார்..

- எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்எம்எஸ்

சூரிய ஒளியைத் தேடி மரங்கள் வளைந்து செல்வது போல 
மனிதன் பொருளைத் தேடிச் செல்கிறான்.

= பா.சக்திவேல்
கோயம்புத்தூர்

அப்படீங்களா!

சிறு பிள்ளைகளின் விளையாட்டு பந்து என்று மட்டும் இதே நினைத்துவிட வேண்டாம். ஒலி கட்டளைக் கேட்டு உருண்டோடிச் சென்று உடனடியாக செயல்படும் தானியங்கி பந்துதான் இந்த "பால்போட்=2'.
அமேசானின் அலேக்ஸாவுக்கு போட்டியாக சாம்சங் உருவாக்கி வரும் தானியங்கி பந்துதான் "பால்போட்=2'.
வீட்டில் உள்ள மின்சார கருவிகளை கட்டளையிட்டவுடன் இயக்க உதவுகிறது அலேக்ஸா. அந்தக் கருவியில் உருண்டு ஓடும் ரோபோவை இணைத்து வீடு முழுவதும் பம்பரம்போல் சுற்றி புகைப்படங்களை எடுத்து பாதுகாக்கும் காவலாளிதான் பால்போட்=2.
2020யிலேயே சாம்சங் நிறுவனம் பாலி என்ற கருவியை அறிமுகம் செய்திருந்தாலும் அதில் மேலும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து பல முனைகளில் வேகமாக திரும்பும் வகையில் இந்த பால்போட்=2வை சாம்சங் நிறுவனம் மேம்படுத்தி உள்ளது.
குரல் கட்டளையைக் கேட்டவுடன் வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் உருண்டோடி வந்து அதில் உள்ள இரண்டு கேமராக்களை இரண்டு கண்களைப்போல பயன்படுத்தி 360 டிகிரியில் சுழல்கிறது.
டிவி, பிரிட்ஜ், ஏசி கருவி என மின்சாதனங்களை இயக்குவது மட்டுமல்லாமல், வீட்டில் மனிதர்கள் இல்லாத போது செல்லப்பிராணிகளைக் கவனித்து கொள்வதுடன், வீட்டை சுத்தப்படுத்தி காலில்லா காவலாளியைப்போல் பதுங்கி கண்காணிக்கிறது பால்போட்=2.
இனி வரும் காலங்களில் வீடுகளில் பந்துகள் உருண்டோடினால் சற்று கவனத்துடன்தான் இருக்க வேண்டும். 

= அ. சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com