திரைக் கதிர்

முன்னாள் முதல்வர் மு,. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக உருவாகவுள்ளது.
திரைக் கதிர்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் மு,. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக உருவாகவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து அவர் பேசும் போது... அது குறித்த யோசனை உள்ளது. அதை படமாக எடுப்பதை விட, வெப் சீரிஸ் என்பதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  திரைக்கதை, இயக்குநர், நடிகர்கள் தேர்வில் விரைவில் உதயநிதி கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.  ராஜ் கமல் பிலிம்ஸþக்கு அவர் நடிக்க வேண்டிய படத்துக்கான கதை தேர்வில் தற்போது இருக்கிறார். இந்தப் படம் முடிவுக்கு வந்ததும் மு.கருணாநிதி வெப் சீரிஸ் முழு வேகம் எடுக்கும் எனத் தெரிகிறது. 

--------------------------

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் அமெரிக்கா திரைப்படக்கல்லூரியில் படித்தவர். அவர் நடிகராக அறிமுகமாவாரா அல்லது இயக்குநராக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெப் சீரிஸ்க்கு கதை எழுதுவதாக இதற்கு முன்பு தகவல் வந்தது. தற்போது அக்கதையை எழுதி முடித்துவிட்டார். தான் இயக்குநராக அறிமுகமாகப் போவதாக ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது மகனின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு கனவு நனவாகி இருப்பதாகவும், இப்போது தைரியமாக இருக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார். 

--------------------------

ஆம்... "வணங்கான்' படம் நின்று விட்டது... இருவரும் பிரிந்து விட்டார்கள்.""இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே "வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார் பாலா. அவரின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன் என்று பேசியிருக்கிறார் சூர்யா.

--------------------------


தனது காதலரை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியிருந்தார் பிரியா பவானி சங்கர். தற்போது தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், 18 வயது இருக்கும் பொழுது நாங்கள் கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் எங்களின் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். தற்போது அந்தக் கனவின்படி, நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com