கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பக்தர்களை  திகைக்க வைத்த  வாரியார்!

ஒரு சமயம்  கிருபானந்த வாரியார்,  கதாகாலட்சேப நிகழ்ச்சி ஒன்றில்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.  தனது பேச்சின்  நடுவே  திடீரென்று,  ""நாமெல்லாம் பெண் பிள்ளைகள்''  என்று கூறினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:19 am

DIN

ஒரு சமயம்  கிருபானந்த வாரியார், கதாகாலட்சேப நிகழ்ச்சி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.  தனது பேச்சின்  நடுவே  திடீரென்று, ""நாமெல்லாம் பெண் பிள்ளைகள்''  என்று கூறினார்.

இதைக் கேட்டதும் பக்தர்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.  இதற்கான அர்த்தம் புரியாமல்  ஒருவரை  ஒருவர்  பார்த்துக் கொண்டனர்.

அவர்களின்  திகைப்பைக் கண்ட வாரியார் தொடர்ந்து  பேசினார்.  ""உலகில் ஒரே  ஒருவன்தான் ஆண் பிள்ளை.  சிவ பெருமானின்  நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த  முருகனே  அந்த ஆண்பிள்ளை.  உலகத்தில்  பிறக்கும்  மற்ற அத்தனை பேரும் தாயின்  கருவில்  வளர்ந்து  பிறப்பதால் நாம் அனைவரும் பெண்பிள்ளைகளே''  என்று அனைவரின்  திகைப்பிற்கும்  முற்றுப்புள்ளி வைத்தார் கிருபானந்த  சுவாமிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.