""சினிமா தியேட்டர் கவுன்ட்டர்ல ஏன் இஞ்சி மிடடாய் தர்றாங்க?''
""கதையை ஜீரணிக்கத்தான்''
-எஸ்.வேல் அரவிந்த்,
திண்டுக்கல்.
""சார்.. என்கிட்ட ரெண்டு வரியில ஒரு கதை இருக்கு?''
""என்கிட்ட கொடுங்க.. 200 எபிசோட் டி.வி. சீரியல் எடுத்துடுறேன்''.
-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
""மகளிர் அணித் தலைவியை காதலிச்சது தப்பாப் போச்சு''
""ஏன்?''
""கூட்டமா காதலிக்க பீச்சுக்கு வர்றாங்க!''
-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்
""சார்.. உங்க ஆபிசில் பாம்பு வந்ததுன்னு சொன்னீங்களே.. பிறகு என்னாச்சு?''
""அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கிருச்சி''
-ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.
""ராப்பிச்சை திட்டிட்டு போறானே? ஏன்?''
""பிரியாணி- ஷவர்மா போட்டதுக்குதான்''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""ஏம்பா.. இந்தக் கிளியின் மூக்கை கட்டி வச்சி இருக்கே..?''
""இது மோசமான கிளிங்க.. வர்ற கஸ்டமர்கிட்ட "இந்த ஆள் கப்ஸா விடறான்னு' சொல்லுது. அதனாலே சீட்டு எடுக்க மட்டும் வாய்க்கட்டை அவிழ்த்து விடுவேன்''.
- வண்ணை கணேசன்,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


