யார் இந்த புதின்?

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. 
யார் இந்த புதின்?

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. 
 தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டார். 
 டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்று நேரம் நின்றார். 
 ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார். 


 பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது. 
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். 
உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.  
 இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றார். ஆண் குழந்தை பிறந்தது. 
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்குப் பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா? 
 விளாதிமீர் புதின். அவர்தான் ரஷ்யாவின் அதிபர். 
 எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று உலகின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் மனிதராக மாறியிருக்கிறார் புதின்.  
அவரது பதவிக்காலத்தில் ஐந்து அமெரிக்க அதிபர்களை எதிர்கொண்டவர். அவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், 23 ஆண்டுகளாக ரஷியாவின் அசைக்க முடியாத அதிகார மையமாக புதின் இருக்கிறார்.  
 ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு நீண்ட காலம் ரஷியாவை ஆள்பவர். "தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும்  என்றிருந்த  ரஷிய அரசியல் சட்டத்தையே திருத்திவிட்டார்.  
 (ஹிலாரி கிளின்டன் தனது 'ஹார்டு சாய்ஸ்'  என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com