பிட்ஸ்

பிற பத்திரிகைகளில்  வரும்   முக்கியமான  செய்திகளைத்  தொகுத்து  வெளியிடும்  "கத்திரி விகடன்'  என்னும்  பத்திரிகையைத் தொடங்கி அதற்கான  விளம்பரத்தை வெளியிட  ஆனந்த விகடன்  பத்திரிகைக்கு அனுப்பினார் அவர்.
பிட்ஸ்
Published on
Updated on
2 min read

பிற பத்திரிகைகளில்  வரும்   முக்கியமான  செய்திகளைத்  தொகுத்து  வெளியிடும்  "கத்திரி விகடன்'  என்னும்  பத்திரிகையைத் தொடங்கி அதற்கான  விளம்பரத்தை வெளியிட  ஆனந்த விகடன்  பத்திரிகைக்கு அனுப்பினார் அவர்.

உடனே  அவருக்கு  அங்கிருந்து  அழைப்பு வந்தது. விளம்பரத்துக்காக அவர் அனுப்பிய  பணத்தையும்  திருப்பிக் கொடுத்து  அவரை  உதவி  ஆசிரியராகப்  பணியில்  சேருமாறு  கேட்டனர்.

அவர்தான்  சாவி!

-------------------------------------------

கிருபானந்த வாரியார்  12 வயதிலேயே பதினான்காயிரம்  பண்களை மனப்பாடம்  செய்திருக்கிறார்.  "திருப்புகழ் அமிர்தம்'  என்னும் மாத இதழை  37  ஆண்டுகள்  நடத்தியிருக்கிறார். தியாகராஜ பாகவதர் நடித்த  "சிவகவி'  படத்திற்கு  வசனம்  எழுதி இருக்கிறார்.

-------------------------------------------

காலஞ்சென்ற  பிரபல  திரைப்பட  பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜா  "பக்கயிண்டி அம்மாயி'  என்ற  தெலுங்குப் படத்தில்  முக்கியமான  வேடத்தில்  நடித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்குப்  பிறகு  அதே   பெயரில்  அந்தப் படம்  மீண்டும்  எடுக்கப்பட்டபோது  அதில்  பின்னணிப்  பாடகர்  எஸ்.பி.  பாலசுப்பிரமணியம் அதே  வேடத்தில்  நடித்திருந்தார்.

-------------------------------------------

பாட்டி பேத்திக்கு  கதை சொல்வது  வழக்கம்.  ஆனால்   உலகப் புகழ்பெற்ற  துப்பறியும்  நாவலாசிரியை அகதா கிறிஸ்டி  தன் பாட்டிக்கு  எட்டு வயதிலேயே  மர்மக் கதைகள்  சொல்லி  திடுக்கிட  வைப்பாராம்.

- வி.ந.ஸ்ரீதரன், சிறுசேரி.

-------------------------------------------

ஆஸ்கர்  ஒயில்ட்  ஒருமுறை தாம்  எழுதிய  "நவீனம்'   ஒன்றை  அச்சிடுமாறு  அச்சகம்  ஒன்றிற்கு அனுப்பி  வைத்தார்.

சிலநாள்களில் நவீனத்தின்  கையெழுத்து  பிரதி  அவருக்கே  திரும்பி வந்தது.

ஆச்சரியத்துடனும் ஆத்திரத்துடனும் பார்சலைப் பிரித்துப் பார்த்தார்  ஒயில்ட்.  அந்த கடிதத்தில், "உங்கள்  கையெழுத்துப் பிரதியில், கால்புள்ளி,  அரைப்புள்ளி,  முக்கால் புள்ளி,  முழுப்புள்ளி,  கேள்விக் குறி,  ஒன்றையுமே  காணோம், தயவு செய்து  அவற்றைப்  போட்டனுப்பி வையுங்கள்' என்று எழுதியிருந்தது.

உடனே  ஆஸ்கர் ஒய்ல்டு  ஒரு வெள்ளைத்தாளை  எடுத்து  அதில்  நிறைய எல்லா வகையான  குறிகளையும் போட்டு அதன்  கீழே,  "நீங்கள்  விரும்புகிறார்  போல்   இவற்றைப் பகிர்ந்து  போட்டுக் கொள்ளுங்கள்'  என்று  எழுதியனுப்பினார்.
"படியுங்கள்  சுவையுங்கள்' நூலிலிருந்து)

 - ஜே.மகரூப், 
குலசேகரன் பட்டினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com