பேல்பூரி

""அட..  இதுதான் நீ தீபாவளிக்கு எடுத்த சுடிதாரா?, சூப்பராக இருக்குடி!''""இது தீபாவளிக்கு எடுத்ததில்லடி. எனக்கு எடுத்தது!''
பேல்பூரி

கண்டது


(குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்)

முழுக்கோடு, புண்ணியம்.

-நெ.ராமகிருஷ்ணன்,
சென்னை-74.

(வந்தவாசி அருகே ஒரு ஊரின் பெயர்)

புலிவால் 

-ஏ.எஸ். நடராஜன்,
சிதம்பரம்.

(பரங்கிப்பேட்டை- கச்சேரி தெருவில் உள்ள ஸ்டேஷனரி கடையின் பெயர்)

திரு"தாள்வகைப் பொருளகம்'

-சிவகுமார் நடராஜன்,
பரங்கிப்பேட்டை.

கேட்டது


(திருச்சியில் ஓர் திருமண மண்டபத்தில்..)

""மொய் கவரில் இருநூறு எழுதிட்டு நூறு ரூபாயை எடுத்துட்டீங்களே! ஏன்?''
""சாப்பாடு.. சரி இல்லையே..!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு இளம்பெண்கள் பேசிக் கொண்டது)

""அட..  இதுதான் நீ தீபாவளிக்கு எடுத்த சுடிதாரா?, சூப்பராக இருக்குடி!''
""இது தீபாவளிக்கு எடுத்ததில்லடி. எனக்கு எடுத்தது!''

-இரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.

(திருநெல்வேலி மார்க்கெட்டில் இருவர் பேசிக் கொண்டது)

""பிளஸ் டூ முடிச்ச உங்க பையனை எதுல சேர்த்து விட்டு இருக்கீங்க?''

""எம்.பி.பி.எஸ்., அக்ரி, வெட்னரி டாக்டர் சீட்டுக்கு டிரை பண்ணினேன் கிடைக்கல.  சரி ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.எஸ்சியாவது சேர்க்கலாம்ன்னு பார்த்தேன். கிடைக்கல. இப்ப வேற வழி இல்லாம என்ஜினீயரிங் காலேஜ்ல சேர்த்துவிட்டிருக்கேன்.''

-க.சரவணகுமார்,
திருநெல்வேலி.

யோசிக்கிறாங்கப்பா!


அகலக்கூடியது பொன்நகை. 
ஆளக்கூடியது புன்னகை.

-அரு.இலக்குமி,
கோவை.

மைக்ரோ கதை


இராமசாமியும், ரெங்கசாமியும் ஒரே நிறுவனத்தில்  30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்தவர்கள். இணைபிரியாத நண்பர்கள். ஓய்வு பெற்றவுடன் இராமசாமி சென்னையிலேயே தங்கிவிட்டார். ஆனால், ரங்கசாமி தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.

வேலை நிமித்தமாக சென்னை வந்த ரங்கசாமி தனது நண்பர் ராமசாமியின் வீட்டில் ஒருநாள் தங்கினார்.  புறப்பட்டு சென்ற ரங்கசாமியை ராமசாமி ரயில் நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்தார். ரயில் புறப்பட்டபோது  ஜன்னல் அருகே நின்றபடி ராமசாமி, ""இன்னும் சில நாள் தங்கியிருந்து சென்றிருக்கலாம்'' என்றார்.

இதற்கு ரங்கசாமி சொன்ன பதில்:

""நான் ரயிலுக்கு ரிசர்வ் பண்ண போனேன். திரும்பி வந்து உன் வீட்டில் டிரஸ் எடுத்து வைச்சேன். அப்புறம் குளித்து டிரஸ் பண்ணிட்டு கிளம்புனேன். வீட்டில் எல்லோரிடமும் சொல்லிட்டு வந்தேன். ஸ்டேஷனுக்கு ஆட்டோவுல ரெண்டு பேரும் வந்தோம். ரயில் ஏறினேன். அப்பவெல்லாம் சொல்லல! ரயில் புறப்படும்போது, ரெண்டு நாள் இருந்துட்டு போன்னு சொல்றீயே?  இது நல்லா இருக்கா! யோசிச்சு பாருங்க'' என்றார் ரங்கசாமி.

தப்பு செய்துவிட்டோமே என்று இராமசாமி தலைகுனிந்துவிட்டார்.

-எஸ்.ஆதினமிளகி வீரசிகாமணி, 
சங்கரன்கோவில்.  

எஸ்எம்எஸ்


நடக்க முடிந்தால்தான் நிற்க முடியும்.

-வி.ந.ஸ்ரீதரன், 
சிறுசேரி.

அப்படீங்களா!


100 பெட்டிகளைக் கொண்ட பயணிகள் ரயிலை  சுவிட்சர்லாந்தில் மலைப்பாதைகளில் இயக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
இயற்கை படர்ந்த சுவிட்சர்லாந்து அல்ப்ஸ் மலையில்  25 ரயில்கள் இணைக்கப்பட்ட 2 கி.மீ. தூர பெட்டிகள் மலைகளின் குகைகளிலும், செங்குத்தான பாதைகளிலும் நுழைந்து நெளிந்து நீண்டுக் கொண்டே சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 150 பயணிகள் சென்ற இந்த ரயில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட அல்புலா - பெர்னியா மலை மார்க்கத்தில் இயக்கப்பட்டது.
22 மலைக்குகைகள், 48 மலை மேம்பாலங்களைக் கொண்ட 25 கி.மீ. தூரத்தை 45 நிமிஷங்களில் கடந்து இந்த ரயில் கின்னஸ் சாதனை படைத்தது. 25 ரயில்களின் ஒட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் இந்த ரயிலை ஒன்று சேர மலைப் பாதையில் இயக்கியது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. முதல் ரயில் ஓட்டுநரின் ஒருங்கிணைப்புக்கு இணங்க மற்ற ஓட்டுநர்களும் வேகம், நிறுத்தத்தைச் செயல்படுத்தி இந்த ரயிலை வெற்றிகரமாக மலைப்பாதையில் இயக்கியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில்களை இயக்கும் பொறுமைக்கு உள்ளான சுவிட்சர்லாந்தின் ரயில்வேக்கு இந்தச் சாதனை மேலும் ஒரு மணிமகுடமாகும்.
இந்தியாவில் சுமார் 3.5 கி.மீ தூர பெட்டிகள் கொண்ட பெரிய ரயில் இயக்கப்பட்டிருந்தாலும் அது சரக்கு ரயிலாகும். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com