பேல்பூரி

""உன் வீட்டுக்காரர் ஒரு நாள் கூட சமைத்ததுஇல்லையா?''""அவர் சமைக்கத்தான் வருவாரு, நான் சமைக்க விட்டது இல்ல... அவர் சமையல் ருசியா இருந்துச்சினா , அப்புறம் நம்மல மதிக்கமாட்டாங்கடி!''
பேல்பூரி

கண்டது

(அம்பாசமுத்திரத்தில் தையல் கடை ஒன்றின் பெயர்)

புதையல் தையல் கடை

ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்.

(திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தின் பெயர்)

சுள்ளெறும்பு

ஆர். பிரசன்னா,
ஸ்ரீரங்கம்.

(வேளாங்கண்ணி டூரிஸ்ட் வேன்முன்புறக் கண்ணாடியில்)

வெற்றியின் வாசலைத் தேடி வந்தவர்கள்,
நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம்
விலாசம் கேட்டிருப்பார்கள்!

வ.வெற்றிச்செல்வி,
வேதாரண்யம்.

(வேதாரண்யம்தோப்புத்துறையிலுள்ள ஒரு ஆட்டோ ஒர்க் ஷாப்பின் பெயர் )

அணில்

சு.மூன் சுதாகரன்,
வானவன்மகாதேவி.

கேட்டது


(நாகர்கோவில் செல்லும் டவுன்பஸ்ஸில்நடத்துநரும் பயணியும்)

""சார்... ஒரு நூறு ரூபாய்க்கு சில்லறைகிடைக்குமா?''
""ஓ... கிடைக்குமே''
"" சரி, சில்லறை தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்... பஸ்ஸ்டாண்டுக்கு டிக்கெட் ஒண்ணு குடுங்க''
""இதை, நூறு ரூபாய்க்குசில்லறை கேட்கும் போதே கேட்டிருக்கலாமே?''
""கேட்டிருக்கலாம்தான்...ஆனா ஆறு ரூபாய் டிக்கெட்டுக்கு போய், நூறு ரூபாய் தந்தால், நீங்க வழக்கமா விடுற, கன்னா பின்னா டயலாக்கை
விடுவீங்க... இப்ப அந்த பிரச்னை இல்லை பாருங்க''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

(பட்டுக்கோட்டை திருமண வீட்டில்இரு பெண்கள்)

""உன் வீட்டுக்காரர் ஒரு நாள் கூட சமைத்ததுஇல்லையா?''
""அவர் சமைக்கத்தான் வருவாரு, நான் சமைக்க விட்டது இல்ல... அவர் சமையல் ருசியா இருந்துச்சினா , அப்புறம் நம்மல மதிக்கமாட்டாங்கடி!''

ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.


யோசிக்கிறாங்கப்பா!


"துஷ்டரைக் கண்டால் தூர விலகு'இது பழமொழி;
"தும்மலைக் கண்டால் தூர விலகு'இது புது மொழி!
 

வி.ரேவதி,
தஞ்சை.


மைக்ரோ கதை


அம்மாகடைக்குப்போயிருக்கும்வேளையில், செல்போன் மணியடித்ததும், மூன்று வயது மகள், அதை எடுத்துப் பேசினாள்.
""அம்மா கடைக்குப் போயிருக்காங்க''
""பரவாயில்லம்மா. நான் உங்கிட்டத்தான் பேசணும்''
""என் கிட்டப் பேசணுமா? நீங்க யாரு சார்?''
""சொல்றேன்மா. உங்க அப்பாவுக்குஎவ்வளவு சம்பளம்?
""தெரியாது. ஆனா, எங்க வீட்டுல ரெண்டு கார் இருக்கு''
""உங்க அம்மா என்ன படிச்சிருக்காங்க?''
""தெரியாது. ஆனா, ஆங்கிலத்துலதான் பெரும்பாலும் பேசுவாங்க''
""உங்க வீட்டுல, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இருக்கா?''
""இருக்கு. அதுலதான் நான் தினமும் கேம் ஆடுவேன்''
""சரிம்மா... வச்சிடறேன்''
இணைப்பைத் துண்டிக்கவும், கடைக்குப் போனஅம்மா, வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
மகள் விவரத்தைச் சொல்ல, பதறிப் போனஅம்மா, அந்த எண்ணைத் தொடர்புகொண்டு, ""சார் ... நீங்க யாரு?'' என்றாள்.
""நீங்க முப்பதாயிரம் பணத்தை நாளைக்குக் கட்டிடுங்க. கேட்ட கேள்விக்கெல்லாம் மிகச் சரியா பதில் சொல்லி, எல்கே.ஜி இண்டர்வியூல செலக்ட் ஆயிட்டாங்க உங்க பொண்ணு'' என்றார் பள்ளியின் தாளாளர்.

பூபதி பெரியசாமி,
புதுச்சேரி 9.

எஸ்.எம்.எஸ்.

மிகச் சிறியதாக இருந்தால் இறுக்கிப் பிடிக்கும்...
மிகப்பெரியதாக இருந்தால்தடுமாறச் செய்யும்...
செருப்பும்,வருமானமும்.

எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

அப்படீங்களா!

"நேரத்தைக் காட்டுவது மட்டும்தான் என் பணி' என்று கைக்கடிகாரம் பிடிவாதம் பிடித்திருந்தால், அது இந்த உலகத்தில் இருந்து காணாமல் போயிருக்கும்.
கைக்கடிகாரம் நேரத்தைக் காட்டுவதைத் தாண்டிஇன்று பலவிதங்களில் பயன்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ராக்லீ போட்டோனிக்ஸ் என்ற நிறுவனம்தற்போது தயாரித்துள்ள கையில் அணியக் கூடிய கருவி, மனித உடலின் பலவிதமான செயல்பாடுகளைக் கண்டறிந்துதெரியப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள குளூகோசின் அளவு, உடல்வெப்பநிலை உள்பட உடலின் பல நிலைகளைப் பற்றியதகவல்களை இந்த கையில் அணியக் கூடிய கருவி சொல்லிவிடுகிறது.

இதற்கு இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் பயன்படுகின்றன. அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டர்களும் பயன்படுகின்றன.

உடலின் இயக்கங்களைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே சிவப்பு மற்றும் பச்சை எல்இடி ஒளி பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இருந்தது. அந்த ஒளி உடலில் உள்ளதமனிகளில் பட்டு எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறதுஎன்பதை வைத்து இதயத் துடிப்பின் அளவையும்,

ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவையும் கண்டறியும் பழைய தொழில்நுட்பத்துக்குப் பதிலாக, இந்த கையில் அணியும் கருவியில் உள்ள சென்சார்களும், அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டர்களும் பயன்படுகின்றன.

இது போன்ற கைகளில் அணியக் கூடிய கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்துடன் இந்த ராக்லீ போட்டோனிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாரித்து தருகிறது.

வீட்டுக்குத் தெரியாமல் குடித்துவிட்டு வருபவர்களின் கையில் இந்தக் கருவியை மாட்டிவிட்டால் போதும், அவர்களின் உடலில் உள்ள ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவையும் இந்தக் கருவி கண்டுபிடித்துக் கூறிவிடும். குடிக்கவில்லை என்று பொய் சொல்ல முடியாது.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் இந்தக் கருவியின் உதவியால் காவல்துறையிடம் சிக்கிக்கொள்வார்கள்.

என்.ஜே.,
சென்னை58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com