ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முழங்கால் வலி... செரிமானம்!

என் வயது 67. பயணத்திற்கு மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்துகிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று இடது முழங்காலில் வலி ஏற்பட்டது. கால்சியம் மாத்திரை மற்றும் மெழுகு சிகிச்சை எடுத்தேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முழங்கால் வலி... செரிமானம்!

என் வயது 67. பயணத்திற்கு மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்துகிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று இடது முழங்காலில் வலி ஏற்பட்டது. கால்சியம் மாத்திரை மற்றும் மெழுகு சிகிச்சை எடுத்தேன். இரண்டு வாரங்களில் வலி வலது முழங்காலுக்கு மாறி, மடக்கக் கடினமாகவும், வலியாகவும் இருக்கிறது. இழுத்து இழுத்து நடக்கிறேன். வலி, வீக்கம் குறைய வழி உள்ளதா?

விஜயன்,
திருச்சி.

வயதின் மூப்பு காரணமாக ஏற்படும் உட்புற வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு ஆகியவற்றின் சீற்றங்களால் ஏற்படும் வாயுவின் வளர்ச்சியால், மூட்டின் உட்புறச் சவ்வுகளின் தேய்மானம் தங்களுக்கு வலியாகவும், வீக்கமாகவும் மாறி துன்புறுத்துகிறது. மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவதால், தேய்மானம் துரிதப்படுகிறது. கால்சியம் சத்தில் அடங்கியுள்ள நிலத்தின் ஆதிக்கமானது, வறட்சி, லேசான தன்மை மற்றும் சொரசொரப்பு எனும் குணங்களை மாற்றி, அதற்கு எதிரான குண வளர்ச்சியை ஏற்படுத்தும் சாமர்த்தியத்தையும் பெற்றிருப்பதால், நீங்கள் கால்சியம் மாத்திரை சாப்பிடுவதை அளவுடன் எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.

எந்த மருந்தாக இருந்தாலும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தின் சேர்க்கையின் ஏற்றக்குறைவுகளின் தொகுப்பினால் அமைந்தவையே.

மிதிவண்டியைப் பயன்படுத்தும்போது தங்களுக்கு ஏற்படுவது முட்டியின் அதீத உழைப்பினால் அங்கு உணவால் சேமித்து வைக்கப்பட்ட நிலம் மற்றும் நீரின் அம்சமும் வெகுவேகமாய்க் குறைந்து, காற்று மற்றும் ஆகாயத்தின் அம்சம் பெருகுவதே மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றது. இவ்விரு பூதங்களின் ஆதிக்கத்தை மறுபடியும் மாற்றி அமைத்து, ஏற்பட்டுள்ள தேய்வின் நிலையை நிலம் - நீரினால் நிரப்புவதற்கு, வயிற்றிலுள்ள பஞ்சபெளதிகங்களின் ஒன்றான நெருப்பின் அம்சமானது, பசித்தீ எனும் வடிவிலுள்ளதால், உங்களுக்கு எதையும் செரிக்கக் கூடிய அளவிற்கு அதன் வளர்ச்சியானது இருந்தால் மட்டுமே, உணவில் பொதிந்துள்ள, மருந்தில் அமைந்துள்ள நிலம் - நீர் பாகப்படுத்தி எடுக்கப்பட்டு, குடல் வழியாகப் பயணித்து, கல்லீரல் வழியாக உட்சென்று, அதிவேகமாகப் பயணித்து, மூட்டுகளில் சென்று நிரப்பப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வினை சாதித்துக் காட்டக் கூடிய திறமையை நீங்கள் அடைய விரும்பினால், முதலில் மூட்டுப் பிரச்னையை நேரடியாகக் குணப்படுத்துவதை விட, வயிற்றிலுள்ள செரிமான கேந்திரங்களை வலுப்படுத்தி, குடலிலுள்ள மலாம்சத்தை நீக்கி, அதன் பிறகே மூட்டுகளை வலுப்படுத்தும் சிகிச்சைமுறைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

"இட்டு நிரப்புதல்' எனும் சிகிச்சை முறையை, குடல் வழியாக மூட்டுக்குப் பெறுவதே நிரந்தர குணம் கிடைக்க வழி செய்யுமே தவிர, மேற்பூச்சுகளாலும், தைலக் கலப்பினாலும் மூட்டுகள் தற்காலிகமாகத்தான் வலி நிவாரணத்தைப் பெற முடியும். இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன், சிகிச்சை முறைகளை இதுபோல் கையாண்டு, நம் முன்னோர் குணமடைந்தனர்.

ஆயுர்வேத மருந்துவர்களால் மட்டுமே, குடல் வலுவையும், மூட்டு வலுவையும் ஏற்படுத்தித் தர முடியுமென்பதால், நீங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி, வைத்தியம் செய்து கொள்வதே சிறப்பானது.

மருந்தே குறிப்பிடாமல் பதிலை நிறைவு செய்து விட்டீர்களே என்று நீங்கள் வருந்துவது புரிகிறது. "குடஹரம்' எனும் கஷாயத்தை சிறிது நாள்களோ, சில வாரங்களோ நீங்கள் சாப்பிட்ட பிறகும் ஆயுர்வேத மருத்துவரை காண்பதில் தவறேதுமில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com