கொழுப்பு
By முக்கிமலை நஞ்சன் | Published On : 26th June 2022 06:00 AM | Last Updated : 26th June 2022 06:00 AM | அ+அ அ- |

ஒருமுறை ஒரு தலைமை ஆசிரியர் என்னிடம் (பெ.நா.அப்புசாமி) வந்து, ""தமிழ்க்கடல் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன்'' என்றார்.
""நடத்தப் போவது யார்?'' என்று நான் கேட்டேன்.
""நானே தான்'' என்றார் அவர்.
""அப்படியானால் உங்களுக்கு உடல் தேறும். பணம் தேறாது. பத்திரிகைக்கு
சந்தாதாரர்களைத் தேடி அலைந்து உடல் தேறும்'' என்று விளக்கினேன்.
அப்படியிருந்தும் அவர் பத்திரிகையைத் தொடங்கினார். அதற்கு "கொழுப்பு' என்ற கட்டுரையை எழுதி அனுப்பினேன். ""நான் அவரைத் தான் திட்டுகிறேன்'' என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர், எனக்குக் கொழுப்பு என்று நினைத்துகொண்டார்.
ஆனால், ""பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு அதிகம். அதனால்தான் அவர்கள் அழகாய்ப் பளபளக்கிறார்கள் '' என்று நான் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன்.
அதைப் படித்த பெண்கள், "" உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் இப்படி எழுதுவாய்?'' என்று என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டனர் என்றார் பெ.நா.அப்புசாமி.
(தமிழ் இதழ்கள் வரலாறு என்ற நூலில் இருந்து..)