பேல்பூரி

பேல்பூரி

மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது; இரவலாக வாங்குகின்ற எதுவும் மகிழ்ச்சியைத் தராது!

கண்டது

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியின் பெயர்)

வேர்க்கிளம்பி.

-ஆர். பூஜா,
சென்னை - 1.

(மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

கோழிகுத்தி

- கே.ஆர். உதயகுமார்,
சென்னை -1.

(பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள காரில் எழுதியிருந்தது)

தன் பிள்ளை புத்தகப் பை 
சுமப்பத்தை பெருமையுடன் பார்த்தான் சுமை தூக்கும் தொழிலாளி.


-ஜெ.மணிகண்டன்,
பேரணாம்பட்டு.

கேட்டது

(திருப்பூர் பழைய இரும்புக்  கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது. ஆனால், காலம் எல்லாற்றுக்கும் பதில் சொல்லும்.

-ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.


(மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் இருவர் பேசிக் கொண்டது)

""அதோ போறாரே அவரை எங்கேயோ பார்த்து பழகின மாதிரி இருக்கு. ஆனால் யாருன்னு தெரியல?''
""பணத்தை வாங்கிட்டு ஓட்டு போட்டால் எப்படி தெரியும். உன் வார்டு கவுன்சிலர்தான் அவரு''


-சங்கீத. சரவணன்,
மயிலாடுதுறை.

(நாகர்கோவில் பறக்கை ரோடில் உள்ள கைப்பேசி கடை ஒன்றில்)

""என்ன சார். மொபைல் வாங்கிட்டு, பணம் கொடுக்காமல் போறீங்களே..?''
""நம்ம கடைதானே நாளைக்கு வந்து கொடுக்கலாமுன்னு போனேன்''

-ஏ.ஜாகீர் உசேன்,
கோட்டார்.

யோசிக்கிறாங்கப்பா!


தூரங்கள் அருகில்தான். 
நாம்தான் அருகாமையை தொலைவாக்கிக் கொள்கிறோம்.


-பொன்.சொர்ணவேல்,
செங்கோட்டை.


மைக்ரோ கதை


உணவு சாப்பிட மறுத்த தனது 2 வயது பேத்திக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டி.

""இப்ப நம்ம வீட்டு நாய்க்குட்டிக்கு போடப் போறேன். அது தின்னுட்டு போகப்
போகுது ?''
"அதுவும் பாவம் தானே! பாட்டி,அதுக்கும் கொடு" பேத்தியின் பேச்சைக் கேட்ட பாட்டி,சட்டென்று கிண்ணத்திலிருந்து சிறிது உணவை எடுத்து, அருகிலிருந்த நாய்க் குட்டிக்குப் போட்டார். அப்போது திடீரென்று அவ்வழியாக வந்த ஒரு தெரு நாய் ஒடோடி வந்து,அதை கவ்வி எடுக்க முயன்றது. உடனே வீட்டு நாய் ஆக்ரோஷத்துடன் குறைத்துக்கொண்டே, அதனை விரட்டி விட்டு,அந்த உணவையும் விழுங்கி விட்டு வீட்டுக்குள் ஓடியது.

இப்போது பேத்திக்கு மீண்டும் வலுக்கட்டாயமாக உணவு ஊட்டத் தொடங்கினார் பாட்டி. நாய்க்கு உணவு வழங்கியதை பார்த்துக் கொண்டிருந்த காகம் ஒன்று அருகில் வந்து "கா,கா"  என்று கத்தியது. அது கத்துவது பாட்டிக்கு தா.. ,
தா, என்று கெஞ்சுவது போல இருந்தது. பரிதாபப்பட்ட பாட்டி அந்த காகத்துக்கும் கிண்ணத்திலிருந்த உணவை எடுத்து வீசினார்.

காகமோ அந்த உணவை கல்வி எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டிலிருந்த சுற்றுச்சுவரின் மீது வைத்துவிட்டு,பிற காக்கைகளையும் அழைத்து,அவற்றுக்கும் கொடுத்து,அதுவும் சாப்பிட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேத்தியிடம் பாட்டி சொன்னார்.

""பாத்தியா,நாய் யாருக்கும் கொடுக்காம சாப்பிடுது, காக்கா எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுது. நம்ம நாய் மாதிரி இருக்கக் கூடாது, காக்கா மாதிரி இருக்கணும்.''

-சி.வ.சு.ஜெகஜோதி,
ராமநாதபுரம்.



எஸ்எம்எஸ்


மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது; 
இரவலாக வாங்குகின்ற எதுவும் மகிழ்ச்சியைத் தராது!


-ஜி. மஞ்சரி,  
கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!


அனுப்பிய தகவல்களை ஒருமுறை மட்டும் படித்தவுடன் தானாக அழியும் புதிய சேவை இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் "டிஸ்அப்பியரிங்' என வழங்கப்படும் இந்தச் சேவை இன்ஸ்டாகிராமில் "வேனிஷ்' என வழங்கப்பட்டுள்ளது.  இதன் அனுப்பப்படும் தகவல்கள் ஒருமுறை படித்தவுடன் தானாக அழிந்துவிடும். 

எனினும், இந்தத் தகவல்களை "ஸ்கிரீன் ஷோட்' அல்லது வேறு கைப்பேசி மூலம் புகைப்படமோ விடியோ பதிவோ செய்து வைத்து கொள்ள முடியும்.

இந்த புதிய சேவையைப் பயன்படுத்தி புகைப்படங்கள், விடியோ, தகவல்கள் ஆகியவற்றை அனுப்பலாம். இந்தத் தகவல்கள் மற்றவர்களுக்கு அப்படியே அனுப்பப்படுவதைத் தடுக்க இந்தச் சேவை உதவுகிறது. 

"வேனிஷ்' சேவை மூலம் அனுப்பப்பட்ட தகவல் என்பதை அந்தத் தகவல் வந்து சேர்ந்ததும் இன்ஸ்டாகிராம் எச்சரித்துவிடும். இன்ஸ்டாகிராமில் இருந்து மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்குக்கு அனுப்பப்படும் தகவல்களுக்கு மட்டும் இந்தச் சேவை செல்லுபடியாகும்.

ஃபேஸ் புக் மெசஞ்சர் போன்றவற்றில் பகிரப்படும் இன்ஸ்டாகிராம் தகவல்களுக்கு இதைப் பயன்படுத்த முடியாது. 

இந்த "வேனிஷ்' சேவையைப் பயன்படுத்த முதலில் இன்ஸ்டாகிராம் ஆப்-பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த ஆப்பில் வலது மேல்புறம் உள்ள தகவலை அனுப்பும் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அப்போது அந்தத் தகவல் "வேனிஷ்' சேவையில் அனுப்ப வேண்டுமா இல்லையா எனக் கேட்கும். இந்த சேவையைப்  பயன்படுத்தி ஒரு முறை மட்டும் பார்க்கக் கூடியதாக தகவலை பகிரலாம். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com