திரைக் கதிர்

விஜய்  லோகேஷ் கனகராஜ் கூட்டணி, "லியோ' வுக்கான காஷ்மீர் ஷெட்யூலை முடித்து, சென்னையில் முகாமிட்டிருக்கிறது.
திரைக் கதிர்
Updated on
1 min read

விஜய்  லோகேஷ் கனகராஜ் கூட்டணி, "லியோ' வுக்கான காஷ்மீர் ஷெட்யூலை முடித்து, சென்னையில் முகாமிட்டிருக்கிறது. ஸ்டூடியோ ஒன்றில் வீடு செட் தயாராகி வருகிறது. விரைவில் விஜய், த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் நடக்கவிருக்கிறது. சென்னை செட்யூலுக்குப் பிறகு இந்த டீம் ஹைதராபாத் பறக்கலாம்   என்கின்றனர்.

----------------------------

பாதியில் நின்ற "வணங்கான்' படத்தை மீண்டும் தொடங்கி விட்டார் இயக்குநர் பாலா. ஏற்கெனவே சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்த நிலையில், அதற்குச் செலவான தொகையை கொடுத்து விட்டு ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லி பாலாவிடம் பஞ்சாயத்து பேசியிருந்தார்கள். ஆனால், பண விவகாரத்தைச் சட்டை செய்யாமல், கன்னியாகுமரிக்குப் போய் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் பாலா. "கவுன்சிலில் புகார் பண்ணலாமா?' என நெருக்கமானவர்கள் கேட்க, "வேண்டாம்' எனச் சொல்லிவிட்டாராம் சூர்யா.

----------------------------

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, மகிழ் திருமேனி ஆகியோரின் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறாராம் ஆர்யா. இந்த இருவரும் ஆர்யாவை வைத்து ஏற்கெனவே படமெடுத்தவர்கள். ஆனாலும், இருவருமே பிஸியான ஓட்டத்தில் இருப்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதனால், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, "நவம்பர் ஸ்டோரி' இந்திரா சுப்ரமணியன் இருவரிடமும் கதை கேட்டு அடுத்த லைன்அப்புக்கு வியூகம் வகுத்துவருகிறாராம் ஆர்யா.

----------------------------

தமிழ், மலையாளம், கன்னடம்,  ஹிந்தி எனப் பல மொழிகளில் பிரபல பிண்ணனி இசை பாடகியாக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மேலும், கர்நாடக இசை மட்டுமின்றி, சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இந்துஸ்தானி இசை உட்பட எல்லா ஜானர்களிலும் பாடக்கூடியவர். ற்போது இசைக் கச்சேரிக்காக லண்டனுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வருடத்தின் "சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com