அசத்தல்...!

மனித உணவில் ஓர் ஆதாரம்.  கடற்பாசி வளர்ப்பு முறை பிலிப்பைன்ஸில் 1960-இல் தொடங்கியது.  
அசத்தல்...!
Published on
Updated on
1 min read

மனித உணவில் ஓர் ஆதாரம்.  கடற்பாசி வளர்ப்பு முறை பிலிப்பைன்ஸில் 1960-இல் தொடங்கியது.  1990-களின் முற்பகுதியில் சீனாவில் கடற்பாசி வளர்ப்பு, நுட்பங்கள் உருவாக்கப்பட்டன.  இதில் பழுப்பு நிறக் கடற்பாசிகள் வளர்ப்பு நுட்பங்களில் வரி,  கயிறு முறைகள் அடங்கும். 
இந்தக் கடற்பாசியை 15 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்துவரும் ரா.பரமேஸ்வரி கூறியதாவது:
''புதுக்கோட்டை மாவட்டம், பாலக்குடி கிராமத்தில் தங்கியிருந்து, கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டேன்.  தற்போது ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள யாக்கூப்ஹசன் பேட்டையில் தொடங்கியுள்ளேன். 
புதுக்கோட்டை,  ராமநாதபுரம் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் இத்தொழிலை செய்கின்றனர். 
கடற்பாசி வளர்க்க,  தண்ணீரின் இயக்கம் சீராக உள்ள பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். தண்ணீர் சுத்தமானதாகவும், மாசுபடாமல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். ஆறுகள், கடல் சேருமிடம். அதிகமான அலைகள் மோதும் இடத்தை தேர்வு செய்யக் கூடாது. இதை செய்வதற்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படாது.
கோடியக்கரைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துகொண்டு,  அதை ஒரு நீண்ட கயிற்றில் வரிசையாகவும், அதற்கிடையே கடற்பாசி விதைகளைக் கட்டி விடுவோம். 
இதைக் கடற்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் முதல் 200 மீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று கடற்பாசி வளர்ப்பதற்கான இடத்தை அமைத்து விடுவோம். அவற்றை மீன் கடித்து விடாமலும்,  அழுக்கு சேராமல் பார்ப்போம்.  சுமார் 45 நாள்கள் கழித்து அறுவடை செய்யப்படும்போது,  ஒரு கிலோ விதைக்கு 10 கிலோ வரை பாசிகள் கிடைக்கும். 
பச்சையாக விலைக்குக் கொடுக்கும்போது,  ரூ. 15-க்கும்,  மண்ணை அகற்றி காயவைத்து விற்பனை செய்யும்போது  ரூ.85 வரையும் உள்ளுர் வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். 
செடிகளுக்கு உரமாகவும். ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, வாசனை திரவியம், மதுப் பாட்டில்கள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்கும்,   மருத்துவத்துக்கும் இது பயன்படுகிறது. இந்த ஏப்ரல் முடிந்தவுடன் மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களுக்கு விளைச்சல் இருக்காது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com