திரைக்கதிர்

திரைக்கதிர்

"புஷ்பா " 2' படத்தின் போஸ்டரும் டீசரும்தான் வெளியாகின.  படத்தின் பிசினஸ் அதிக அளவில் போய் விட்டதாம். ஆடியோ ரைட்ஸ் மட்டும் ரூ. 75 கோடி.  ஹிந்தி ரைட்ஸ் சுமார் ரூ. 200 கோடி.

"புஷ்பா " 2' படத்தின் போஸ்டரும் டீசரும்தான் வெளியாகின.  படத்தின் பிசினஸ் அதிக அளவில் போய் விட்டதாம். ஆடியோ ரைட்ஸ் மட்டும் ரூ. 75 கோடி.  ஹிந்தி ரைட்ஸ் சுமார் ரூ. 200 கோடி.  இந்தப் படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.175 கோடியும், இயக்குநர் சுகுமாருக்கு ரூ. 55 கோடியும் பேசியிருக்கிறார்கள். படத்தின் மொத்த பிசினஸ் ரூ. 2,000 கோடியைத் தொட வேண்டும் என்பதுதான் படக்குழுவின் திட்டமாம். கூடுதல் செய்தி, அடுத்து அல்லு அர்ஜுனுக்குக் கதை சொல்லி ஓ.கே. செய்திருக்கும் நம்மூர் இயக்குநர் "விலங்கு' வெப் சீரீஸ் செய்த பிரசாந்த் பாண்டிராஜ்.

"சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் சூர்யா இப்போது நடித்து வரும் "சூர்யா 42' பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டிலாக தூய தமிழ்ப்பெயர் ஒன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படத்தின் தலைப்பு என ஒரு டைட்டில் வெளியாகி உள்ளது. படத்துக்குப் பெயர் "கங்குவா'. கிட்டத்தட்ட இதே பெயரில் ரஜினிகாந்த், ஷபானா ஆஸ்மி நடிப்பில் 1984-ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படத்தின் டைட்டில் "கங்குவா'. இது தமிழில் வெற்றிபெற்ற "மலையூர் மம்பட்டியான்' படத்தின் ஹிந்தி ரீமேக்.

விக்னேஷ் சிவன் விவகாரத்தில் அவசரப்பட்டு அறிவித்து, பின் வாங்க நேர்ந்ததால் அப்படி ஒரு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மகிழ் திருமேனியிடமிருந்து இருந்து முழுக்கதையை கேட்ட பிறகு, திருப்தியான பிறகு, கையில் பவுண்டட் ஸ்கிரிப்ட் வந்த பிறகு, புராஜெக்ட்டை அறிவித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் முழுக்கதையும் தயாராகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, அஜித்தின் பிறந்த நாளன்று "ஏகே 62'க்கான அப்டேட் வெளியாகலாம்.

"பிரேமம்' அனுபமா பரமேஸ்வரன், சில படங்களில் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். விரைவில் அவர் இயக்குநராகவும் ஆவார் என அவருடைய நட்பு வட்டத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் கணிக்கமுடியாத வகையில் அவர் ஒளிப்பதிவாளர் ஆகியிருக்கிறார். "ஐ மிஸ் யூ' என்ற குறும்படத்திற்கு அனுபமாதான் ஒளிப்பதிவு. நடிப்பு உட்பட அப்படத்தில் இடம் பெற்றவர்கள் அத்தனை பேரும் அனுபமாவின் நண்பர்களாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com