திரைக் கதிர்
ரஜினி அடுத்தடுத்து செய்யப் போகும் படங்களுக்கான கதைகளை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒரு தடவை சொல்லிவிடுங்கள்' என்று இயக்குநர்களுக்கு இப்போது அறிவுறுத்தப்படுகிறதாம். இறுதி முடிவு ரஜினிதான் என்றாலும், கதையில் தான்தான் நடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள், கதையின் வெயிட் என எல்லாவற்றையும் ரவிக்குமார் எடை போடமுடியும் என்று ரஜினி நினைக்கிறாராம். கே.எஸ்.ஆரும் இதனை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கடமையாற்றிவருகிறாராம்.
---------------------
சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் மருத்துவர் முருகேஷ். இவர், யோகி பாபு, லட்சுமி மேனன் இருவரையும் வைத்து "மலை' என்கிற படத்தை இயக்குகிறார். படத்தில் நாட்டு மருத்துவராக யோகி பாபுவும், எம்.பி.பி.எஸ் முடித்த அலோபதி மருத்துவராக லட்சுமி மேனனும் நடிக்கிறார்கள். மருத்துவக் குளறுபடிகளை மையப்படுத்தும் கதையில், இன்றைய அரசியல் அலப்பறைகளையும் சேர்த்து ரகளை கிளப்பியிருக்கிறார்களாம். ஒரு மருத்துவரே மருத்துவத்துறை சார்ந்த அரசியலைப் பேசியிருப்பதால், படத்தின் மீதான கவனம் கூடியிருக்கிறது.
---------------------
"குளோபல் ஸ்டார்' ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் "வேனிட்டி ஃபேர்' எனும் சர்வதேச யூடியூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அப் போது கர்ப்பிணியான தனது மனைவி உபாசனாவின் கைகளை மடக்கி, அவர்கள் நடந்த தருணங்களை... உண்மையிலேயேஅனைவராலும் விரும்பப்பட்டது. இந்நிலையில் துபையில் உபாசனா காமினேனி கொனிடேலா ராம் சரணுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
---------------------
பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து ரசிகர்களை கவர்ந்திருப்பவர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்... கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர்.
இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் "விமானம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்க அவர் தயாராகி இருப்பதுதான் சிறப்பு. எதிர் வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

