திரைக்கதிர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் நடிக்கிறார் கவுண்டமணி.
திரைக்கதிர்
Updated on
1 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் நடிக்கிறார் கவுண்டமணி.  இதில் சின்ன கேரக்டர்களில் அவருடைய நெருக்கமான, அவர் மீது அன்பு கொண்ட சத்யராஜ், சந்தானம் போன்றவர்களை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியா இருக்கிறது. அவர்களாக நடிக்க விருப்பப்பட்டால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென கவுண்டமணி சொல்லிவிட்டாராம். படத்தில் நிஜ சத்யராஜ், சந்தானமாக இருவரும் வந்து போவது மாதிரியான ஐடியாக்கள் இப்போது உதயமாகி இருக்
கின்றது என்கிறார்கள்.

---------------------------------------------

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "கேப்டன் மில்லர்' வருகிற டிசம்பர் 15'ஆம் தேதி வெளியாகிறது. தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கின்றனர். இது 1930' காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால், அந்தந்த காலகட்டத்திற்கான விஷயங்களை செட்டுகள் அமைத்துச் செய்திருக்கிறார்கள். இருந்தும் அது தொடர்பான கிராபிக்ஸ் பணிகள் கொஞ்சம் மீதம் இருப்பதால், ரிலீஸை டிசம்பருக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

---------------------------------------------

ரஜினியின் "ஜெயிலர்' படத்தில், அவருக்கு மகனாக நடித்திருக்க வேண்டியவர் ஜெய். ரஜினி படத்திலிருந்து அழைப்பு என்றவுடனேயே ஆவலாகப் போன ஜெய், கதையைக் கேட்டதும் "நோ' சொல்லிவிட்டாராம். அப்போது, "ரஜினி பட வாய்ப்பைத் தவறவிட்டிருக்கக் கூடாது' என ஜெய் நண்பர்கள் பலரும் ஆதங்கப்பட்டார்களாம். தற்போது படம் வெளியான நிலையில், "நீ எடுத்த முடிவுதான் சரி' என ஜெய்யைப் பாராட்டுகிறார்களாம். எதிர்மறைப் பாத்திரங்களைச் செய்ய விரும்பாமல் ஜெய் தவிர்த்த அந்தப் பாத்திரத்தில்தான் வசந்த் ரவி நடித்திருக்கிறார்.

---------------------------------------------

2000'ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "ஹே ராம்'. ஷாருக்கான், ஹேமாமாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் சுதந்திரத் தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

---------------------------------------------

அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15'ஆவது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணன் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக  அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க  இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com