ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காக்காய் வலிப்பு குணப்படுத்துவது எப்படி?

என் நண்பரின் மகனுக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து கஷ்டப்படுகிறார். ஆங்கில மருந்துகள் சாப்பிடும்போது,  அடங்குகிறது. ஆனால் மறுபடியும் வந்துவிடுகிறது. எப்படி குணப்படுத்துவது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காக்காய் வலிப்பு குணப்படுத்துவது எப்படி?

என் நண்பரின் மகனுக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து கஷ்டப்படுகிறார். ஆங்கில மருந்துகள் சாப்பிடும்போது,  அடங்குகிறது. ஆனால் மறுபடியும் வந்துவிடுகிறது. எப்படி குணப்படுத்துவது?

-நாகராஜன்,
திருவல்லிக்கேணி, சென்னை.

'சரகஸம்ஹிதை'  எனும் ஆயுர்வேத நூலில் 'அபஸ்மாரம்' எனும் காக்காய் வலிப்பு உபாதை குறித்து குறிப்பு காணப்படுகிறது. ஒவ்வாமை, சுகாதாரமற்ற உணவு வகைகளின் சேர்க்கையினாலும், மனதில் சீற்றமுறும் ரஜஸ், தமோ தோஷங்களாலும் இதயத்தைச் சூழும் வாத, பித்த, கபங்களாகிய தோஷங்களாகிய கவலை, ஆசை, பயம், கோபம், வருத்தம், பதற்றம் ஆகியவற்றாலும் ஒருவருக்கு எந்த நேரத்திலும் காக்காய் வலிப்பு ஏற்படலாம்.
இதயம் சார்ந்த குழாய்களில் நுழையும் வாத, பித்த, கப தோஷங்களால் பாதிப்படையும் இதயமானது, நோயாளியின் மனதைச் சஞ்சலப்படுத்தி, இங்கு மங்கும் காணச் செய்து, இல்லாத வஸ்துகளைக் காண்பதும், கீழே விழச் செய்வதும், நாக்கு, கண்கள், புருவங்கள் துடிப்பதும், வாயிலிருந்து நிறைய எச்சில் ஊறுவதுடன் நுரை தள்ளுவதும், கை, கால்கள் வெட்டி இழப்பதையும் செய்துவிடும்.  பாதிப்பு குறைந்தவுடன் தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்து கொள்ளும்.
வாத தோஷத்தினால் ஏற்படும் வலிப்பு உபாதையில் உடல் நடுக்கம், பற்களைக் கடித்தல், வாயில் நுரை ததும்புதல்,  கடுமையாக மூச்சிரைத்தல், வரட்சி, சிவப்பு, கருப்பான வஸ்துகளைக் காண்தல் ஆகியவை ஏற்படும்.
மஞ்சள் நிறத்தில்  நுரை, கை- கால்கள், முகம், கண்கள், மஞ்சள் நிறமடைதல், பார்ப்பது அனைத்தும் மஞ்சள், சிவப்பு நிறமாகத் தெரிதல், தண்ணீர் தாகம், உடற்சூடு கூடுதல், சுற்றுப்புறமனைத்தும் நெருப்பில் எரிவதுமாகக் காணப்படும்.
கப தோஷத்தில் வெண்ணிற நுரை, கை, கால்கள், முகம், கண்கள் வெண்ணிறமாகுதல்,  உடலில் குளிர்ச்சியும் மயிர் கூச செரிதலும் காணும் உடல் கணக்கும். பார்ப்பது அனைத்தம் வெண்ணிறமாகும். சாதாரண நிலைக்குத் திரும்ப வெகுநேரமாகும்.
மூவகை தோஷங்களாலும் ஏற்படும் வலிப்பு உபாதை, சிகிச்சையினால் குணப்படுத்த இயலாது. ராஜயக்ஷ்மா எனும் கடும் காச நோயிலும், வயோதிகத்திலும் சிறிதும் குணப்படுத்த இயலாது, பதினைந்து நாள்கள்,  பன்னிரண்டு நாள்கள் அல்லது மாதம் ஒருமுறை என சிறிய மாற்றங்களுடன் வலிப்பு நோய் ஏற்படும்.  இதயம் சார்ந்த குழாய்களில் அடைக்கப்பட்டிருக்கும் தோஷங்களை தீவிரமான வாந்தி சிகிச்சையின் மூலமாக அகற்ற வேண்டும். வஸ்தி எனும் எனிமா முறையால் வாத வலிப்பையும், பேதியின் மூலமாக பித்த வலிப்பையும், வாந்தியின் மூலமாக கப வலிப்பையும் சிகிச்சை செய்ய வேண்டும்.
உடல் சுத்தத்தை மேற்குறிப்பிட்ட வகையில் செய்து, உடலை சுத்தம் செய்தவுடன் பசுவின் நெய்யுக்குச் சமமான அளவில் பசு சாணம் கரைத்த நீர், புளித்த தயிர், பால், பசுவின் சிறுநீர் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மூலிகை நெய்யை உள்ளுக்குள் சாப்பிட வேண்டும்.  வலிப்பு உபாதை, மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் இந்த நெய் மருந்துக்கு 'பஞ்ச கவ்யம்' என்று பெயராகும்.   இது கடைகளில் விற்பனையாகிறது.
கடுகு எண்ணெயை நான்கு மடங்கு ஆட்டின் சிறுநீருடன் காய்ச்சி, கடுகு எண்ணெய் மட்டும் மீதமிருக்கும் நிலையில், தலை முதல் கால் வரை தேய்த்துக் குளித்து, பசும் சாணம், பசுவின் சிறுநீரால் குளிப்பாட்டுவதும், உடலெங்கும் தேய்த்துவிடுவதும் சிகிச்சை முறையாகும்.
பழுப்பு நிறத்திலுள்ள பசுவின் சிறுநீரை ஐந்தாறு சொட்டுகள் மூக்கினுள் விடுவது மிக நல்லது. பூச நட்சத்திரம் தோன்றும் தினத்தில் நாயின் பித்த நீரை கண்களில் விடுவதாலும், நெய்யுடன் கலந்து புகை ஏற்படுத்தி மூக்கினுள் விடுவதையும் பரிந்துரைக்கிறார். 
ஆந்தை, பூனை, கழுகு, பாம்பு, காக்கை ஆகியவற்றின் அலகு, இறக்கை மலம் ஆகியவற்றைப் புகைத்து மூக்கினுள் செலுத்துவதால், இதயக் குழாய்கள் சுத்தம் அடைவதுடன் வலிப்பின்  பிடியில் இருந்து விடுபடலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com