சிரி... சிரி...

'இந்த நடிகருக்கு அடிக்கடி கடவுள் வேஷம் கொடுத்தது தப்பா போச்சு?''ஏன் சார்?''அவர் வீட்டுக்கு வெளியே 'உண்டியல்' வெச்சிட்டாரு?'
சிரி... சிரி...


'இந்த நடிகருக்கு அடிக்கடி கடவுள் வேஷம் கொடுத்தது தப்பா போச்சு?'
'ஏன் சார்?'
'அவர் வீட்டுக்கு வெளியே 'உண்டியல்' வெச்சிட்டாரு?'

-கே.இந்து குமரப்பன்,  
விழுப்புரம்.

'புது படத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னே தெரியாம டைரக்டர் ரொம்ப குழம்பிட்டாரு..?'
'அப்புறம் என்னதான் வைத்தாரு..?'
'நீங்களே வைச்சுக்குங்க?'

-கே.விஜயலட்சுமி,
திருச்சி.

'படம் எடுத்த பாம்பு என்ன கேட்குது..?'
'அதோட படத்துக்கு அவார்டு கிடைக்குமான்னு கேட்குது..'

-பர்வதவர்த்தினி,
பம்மல்.

'டி.வி.  மெகா சீரியல் டைரக்டரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சுடி?'
'ஏன்?'
'வீட்டில் வடை பண்ணா கூட ஆமை வடைதான் பண்ண சொல்றாரு?'



'அந்த பாம்பாட்டி ஏன் ரொம்ப ஏழை ஆகிட்டாங்க?'
'அவரோடு பாம்பு எடுத்த படம் சரியாக ஓடலையாம்?'

-தீபிகா சாரதி,
சென்னை.


'படத்துக்கு ஏன் வெற்றி நிச்சயமுன்னு டைரக்டர் டைட்டில் வைச்சாரு....?'
'தயாரிப்பாளருக்கு நம்பிக்கை ஊட்டத்தான்...'



'இந்தப்  பாம்பு ஏன் படம் எடுத்தா சீக்கிரமே தலையை தொங்கப் போடுது..'
'அது குறும்படமாம்..'



'அந்த நடிகர் அரசியலுக்கு வரலைனா, ஜோதிடத் தொழிலை விட்டுடறதா சொன்னீங்களே..!'
'எனக்குக் கிடைத்த அவரோட ஜாதகம் தப்புன்னா நான் என்ன செய்ய முடியும்?'



'அது கண்டிப்பா அழுகைப் படமாகத்தான் இருக்குமுன்னு எப்படி சொல்றீங்க?'
'சீரியல் நடிகைதான் இதற்கு பொருத்தமுன்னு டைரக்டர் சொல்லி ஹீரோயினை போட்டாரே..'



'சினிமா தியேட்டரில் ஏதோ கலாட்டாவாமே/'
'ஆபரேட்டர் படத்தைப் போடாமல் ரொம்ப நேரம் பிலிம் காட்டினால் ரசிகர்கள் தகராறு பண்ண மாட்டாங்களா சார்..'



'என்னங்க.. நான் ஊருக்கு போனபோது வேலைக்காரியோட சினிமாவுக்கு போனீங்களா..?'
'இல்லம்மா ரெண்டு பேருக்கும் அவதான் டிக்கெட் போட்டா..?'

 

'அந்த நடிகர் அரசியலில் குதிக்கப் போறாருன்னு தெரிஞ்சுப் போச்சு..?'
'எப்படி...?'
'ரெட்டை வேடம் போடுற மாதிரி இருந்தாதான் கால்ஷிட் கொடுக்கிறாராம்..'


-வி.ரேவதி,
தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com