திரைக் கதிர்

அஜித்தின் "விடாமுயற்சி' படத்திலிருந்து அவருடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியேறியிருக்கிறார்.
திரைக் கதிர்


அஜித்தின் "விடாமுயற்சி' படத்திலிருந்து அவருடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வெளியேறியிருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் நீரவ் ஷாவுக்கும் இடையே படம் ஆரம்பித்த நாளிலிருந்தே ஒத்துப் போகவில்லையாம். அதனால், படம் தொடங்கிய சில நாள்களிலேயே கழன்று கொள்ள நினைத்தாராம் நீரவ். அஜித்தின் அன்புக்காகக் கட்டுப்பட்டு தாக்குப்பிடித்தவர், ஒருகட்டத்தில் அடுத்தடுத்த கமிட்மென்ட்டுகளைச் சொல்லி வெளியேறியிருக்கிறார். திரு, வேல்ராஜ், சத்யா எனப் பல ஒளிப்பதிவாளர்களை அணுகி ஒரு வழியாக ஓம்பிரகாஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

----------------------------------------------------

ரஜினியின் படத்துக்கு "வேட்டையன்' எனப் பெயர்.... த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மும்பையில் அமிதாப்பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

----------------------------------------------------

தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய்சேதுபதி இணையும் "ட்ரெயின்' படப்பிடிப்பு சென்னையில் பரபரக்கிறது. ரயில் ஒன்றில், ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம்தான் படத்தின் கதை என்ற பேச்சு இருக்கிறது. படத்தில் இரண்டு நாயகிகள். "தேவி 2', "வீரமே வாகை சூடும்', ஆகிய படங்களில் நடித்த டிம்பிள் ஹயாதி ஒரு நாயகி. இன்னொருவர், ஈரா தயானந்த். கன்னடத்தில், "ஷம்பாலா' என்ற படத்தில் நடித்தவரை தமிழுக்கு அழைத்து வருகிறார் மிஷ்கின்.

----------------------------------------------------

வெற்றிமாறன் - கலைப்புலி தாணு - சூர்யா கூட்டணியில் திட்டமிடப்பட்ட "வாடிவாசல்' படத்தின் பலவிதமான ரைட்ஸூம் பூஜை போடப்பட்டபோதே விற்கப்பட்டுவிட்டன. பூஜை முடிந்து பல வருடங்களான நிலையில், படத்துக்குத் திட்டமிடப்பட்ட பட்ஜெட் பல கோடிகளாக இப்போது மாறியிருக்கிறதாம். குறைவான தொகைக்கு ரைட்ஸ் விற்கப்பட்டிருக்கும் நிலையில், படத்துக்கான பட்ஜெட்டை மட்டும் எப்படி மாற்ற முடியும் என்கிற யோசனையில் இருக்கிறார் தாணு. இதற்கிடையில், "விடுதலை பார்ட்-2' படத்துக்காக இன்னும் ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறாராம் வெற்றிமாறன். அதனால், "வாடிவாசல்' திறக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

----------------------------------------------------

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான, "ஜவான்' படம், இந்தியாவின் அத்தனை முன்னணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தியாவில் முதல் படமாக சாதனை படைத்தது. பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடித்திருப்பது இதுவே முதன் முறை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com