பேல்பூரி

'எதுக்குய்யா இனிமே இந்த பீரோ முழுசா என் துணிகளையே வைக்கக் கூடாதுன்னு சொல்றே?'''அரசே 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தா போதுமுன்னு சொல்லிடுச்சில..''
பேல்பூரி

கண்டது

(தூத்துக்குடி மாவட்டம், வானூர் ஒன்றியத்தில் உள்ள ஊரின் பெயர்)

'மூவிருந்தாளி''

(உதகமண்டலம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

'சானமாவு''

-எஸ்.வி.சுகுணா,  
சென்னை-7.

(திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர்)

'குண்டடம்''

-காகை ஜெ.ரவிக்குமார்,
காங்கயம்.

(சென்னை அசோக்நகரில் உள்ள ஒரு ஓட்டலின் பெயர்)

'தி செகன்ட் ஓய்ப்''

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை-74.

கேட்டது

(சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தம்பதிகள்)

'எதுக்குய்யா இனிமே இந்த பீரோ முழுசா என் துணிகளையே வைக்கக் கூடாதுன்னு சொல்றே?''
'அரசே 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தா போதுமுன்னு சொல்லிடுச்சில..''

-ப.சோமசுந்தரம்,
சென்னை-129.

(சூலூரில் உள்ள ஒரு முடித்திருத்தும் கடையில் ஊழியரும், வாடிக்கையாளரும்..)

'சார் கட்டிங்கா.. மொட்டையா...''
'டாஸ்மாக்கில் கட்டிங் போட்டுட்டேன். நீங்க மொட்டை அடிச்சிடுங்க..!''

-அ.செந்தில்குமார்,
சூலூர்.

(திருத்துறைப்பூண்டி ஆட்டோ ஸ்டான்டில் இரு ஓட்டுநர்கள் பேசியது)

'என் மனைவி என்கிட்ட சண்டை போட்டுட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டா.. அதான் கவலையா இருக்கு..!''
'வந்திருடுவாங்க.. கவலைப்படாதே!''
'வந்திடுவாளோன்னுதான் கவலையா இருக்கு?''

-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.


யோசிக்கிறாங்கப்பா!


முதல் முத்தமிட்டவளை மறக்க முடியாது என்கிறார்கள். 
பிறகு ஏன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்.

-ஜி.அர்ஜூனன்,
செங்கல்பட்டு.

மைக்ரோ கதை


'சார் வாங்க என்ன வேணும்''  என்று  மளிகைக்கடைக்கு வந்த மதனிடம் கடை உரிமையாளர் கோபால் கேட்டார்.
'கொஞ்சம் பொறுங்க?  மனைவியிடம் கேட்டு சொல்றேன்''  என்று மதன் தனது மனைவிக்கு போன் செய்தார். 
அவள் சொல்ல, சொல்ல மதன் பேப்பரில் எழுத ஆரம்பித்தார். 'துவரம் பருப்பு 3 கிலோ, உளுத்தம் பருப்பு 2 கிலோ, புளி 4 கிலோ ...'  என்று கடையில் உள்ள பல பொருள்களை கிலோ கணக்கில் மதன் எழுத  கோபாலின் முகம் சந்தோஷத்தில் மிதந்தது.
பேப்பரில் லிஸ்ட் எழுதி முடித்த மதன், அதை கோபாலிடம் கொடுத்துவிட்டு, 'இதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் கால் கிலோ கொடுங்க... போதும்'' என்றார்.
கடைக்காரர் கோபால், 'அடச்சே கொஞ்ச நேரத்தில் சந்தோஷம் போயிடுச்சே..' என்று வேதனைப்பட்டார்.

-கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்எம்எஸ்


விமர்சனங்களை விதையாக்கு. 
விதையை உன் திறமையால் மரமாக்கு.

-முனைவர் உமாதேவி,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) என்றாலே அதன் தொடுதிரைக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனடிப்படையிலேயே விலையும் அமைகிறது.
எளிதில் சேதமடையும் சாதனமாகவும் இந்தத் தொடுதிரை உள்ளது. தொடுதிரையே இல்லாத ஸ்மார்ட்போனை 'ஹுமனே' என்ற நிறுவனம் 'ஸ்மார்ட் பின்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கருவியின் திறன் ஸ்மார்ட் போனையே விஞ்சி உள்ளது.
சட்டையில் அணிந்து கொண்டு தொலைபேசி அழைப்புகளில் பேசவும், குறுந்தகவல் அனுப்பவும், தேவையான தகவல்களை எடுத்துரைக்கவும், பல்வேறு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தவும் உதவுகிறது. இந்தக் கருவிக்கு கட்டளைப் பிறத்தால் போதும். உடனே செயல்படும். 
இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு   (ஏஐ) கேமிரா எதிரே உள்ள பொருள்களை தெரிந்து அதற்கான விளக்ககங்களை உடனடியாக அளிக்கும். அதில் 'சாட் ஜிபிடி' எனும் அதிநவீன தகவல் பெட்டகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களை சிறுவர்கள்  நீண்ட நேரம்  பயன்படுத்துவதால் கண்கள் பாதிக்கப்படுவதாகப் பலரும் அச்சம் தெரிவிக்கின்னர். அந்தக் கவலையை இந்த ஸ்மார்ட் பின் போக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com