ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீரிழிவு நோய் பாதிப்பு தப்பிக்க வழி?

எனக்கு வயது 61.  கடந்த 15 ஆண்டுகளாக, நீரிழிவு நோயால் அவதியுறுகிறேன். கால் பாதத்தில் கூச்சத் தன்மை, எரிச்சல் போன்ற உணர்வு, உணர்வின்மை, ஊசி குத்துவது போன்ற வலி என்று மாறி மாறி ஏற்படுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீரிழிவு நோய் பாதிப்பு தப்பிக்க வழி?


எனக்கு வயது 61.  கடந்த 15 ஆண்டுகளாக, நீரிழிவு நோயால் அவதியுறுகிறேன். கால் பாதத்தில் கூச்சத் தன்மை, எரிச்சல் போன்ற உணர்வு, உணர்வின்மை, ஊசி குத்துவது போன்ற வலி என்று மாறி மாறி ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேத மூலிகை மருந்துகளால் தயாரிக்கப்படும் மாத்திரை உள்ளதா?

-மீனாட்சிசுந்தரம்,
சென்னை.

ஜடாமாஞ்சி வேர், அமுக்கராக்கிழங்கு, சீந்தில்கொடியின் தண்டு, இஞ்சி, தண்ணீர்விட்டான் கிழங்கு. மூக்கரட்டை வேர், கடுகுரோஹிணிசமூலம், அதிமதுரக்கட்டைகளைக் கொண்டு இயற்கையான, பாதுகாப்பான, பயனுள்ள மாத்திரை விற்பனையில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம், இரண்டு அல்லது மூன்று முறை, உணவுக்கு அரை மணி முன் தண்ணீருடன் சாப்பிடலாம். 

இதனால் நரம்பு புத்துணர்வு பெற உதவுகிறது.  அனைத்து விதமான நரம்பு கோளாறுகளுக்குச் சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.

பாவபிரகாசர் எனும் முனிவர், ஜடாமாஞ்சி பற்றிய வர்ணனையில் கூறுவதாவது- 'கசப்பு, துவர்ப்புச் சத்து உடையது. உள்ளுக்குச் சாப்பிடுவதால் அறிவுத்திறன், வனப்பு, உடல் வளுவைக் கூட்டுகிறது. குளிர்ச்சியானது. மூவகைத் தோஷங்களின் சீற்றத்தை அடக்குகிறது. பெருவாரியான தோல் உபாதைகளைக் குணப்படுத்துகிறது' என்கிறார்.

'சூடான வீர்யமுடையதும், விந்தணுப் பெருக்கத்தை ஏற்படுத்துவதும், நரம்புகளை வலுவூட்டுவதும், வாத- கப சீற்றத்தை அடக்குவதும், வெண்குஷ்ட நோயைக் குணப்படுத்துவதும், வீக்கத்தை வடிப்பதுமாகிய சிறந்த மருந்தாக அமுக்கராக்கிழங்கு செயலாற்றுகிறது' என்று தன்வந்திரி நிகண்டு பாராட்டுகிறது.

'சீரண இறுதியில் இனிப்பாக மாறுவதும், எளிதில் செரிப்பதும், கண்களுக்கு உகந்ததும், சர்க்கரை உபாதையினால் ஏற்படும் எரிச்சலை அடக்குவதும், இதயத்தை வலுவூட்டுவதும், ரத்தத்தில் வாதச் சீற்றத்தினால் ஏற்படும் முடக்குவாதத்தைக் குணப்படுத்தும் தன்மையைச் சீந்தில் கொடியின் தண்டு பெற்றுள்ளது' என்று கையதேவ நிகண்டு வர்ணிக்கிறது.

'பசியைத் தூண்டுவதும், ஆமவாதம் எனும் குளிர்ச்சியான வீக்கத்துடன் கூடிய பூட்டு வலியைக் குணப்படுத்துவதும், சீரண இறுதியில் இனிப்பானதும், இதயத்துக்கு உவந்ததுமான செயலாற்றத்தை இஞ்சி உடையது' என்று ராஜ நிகண்டு பாராட்டுகிறது.

'செரிப்பதில் கடினமானதும், குளிர்ச்சியானதும், கசப்பு, இனிப்புச் சுவைகளை உடையதும், ஞாபகச் சக்தியைத் தூண்டுவதும், நெய்ப்பை உருவாக்குவதும், நாடி நரம்புகளை வலுவாக்குவதுமாகிய குணங்களைத் தண்ணீர்விட்டான்கிழங்கு தன்னகத்தே கொண்டுள்ளது' என்கிறார் பாவபிரகாசர்.

'உடல் வீக்கத்தை வடிப்பதும், குளிர்ச்சியான வீர்யத்தை உடையதும், விதை வீக்கம், வயிறு வீக்கம் குணப்படுத்துவதும், பித்த- ரத்தச் சீற்றத்தைக் குணமாக்கும் தன்மையுடையது. மூக்கரட்டை வேர்' என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

'மலமிளக்கி, குளிர்ச்சி, வரட்சி, சர்க்கரை, உபாதை, மூச்சிரைப்பு, காசநோய், ரத்தக் காந்தல், குடல் கிருமிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையுடையதுமாகிய கடுகுரோஹிணி, பல நன்மைகளை மனிதர்களுக்குச் செய்யக் கூடியது என்று தன்வந்திரி நிகண்டு கூறுகிறது.

'குளிர்ச்சி, கனம், இனிப்பு,  கண்நரம்பு வலுவூட்டல், நிறத்தைக் கூட்டுவது, நெய்ப்பு, விந்தணு வளர்ச்சி, தலைமுடி கருமை, பித்த- வாயு- ரத்தக் குறைபாடுகளை அகற்றுவது போன்ற சிறந்த குணங்களை அதிமதுரம் உடையது' என்று பல ஆயுர்வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன.

'ஈ.நெர்வின்' என்ற பெயரில் விற்பனையாகும் மாத்திரையை 'என்ரைட்' என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com