திரைக்  கதிர்

மண முறிவுக்குப் பிறகான வருத்தத்தில் இருந்த சமந்தா, இப்போது முற்றிலும் தேறிவிட்டார்.
திரைக்  கதிர்


மண முறிவுக்குப் பிறகான வருத்தத்தில் இருந்த சமந்தா, இப்போது முற்றிலும் தேறிவிட்டார். போன வாரம் சென்னைக்கு வந்தவர், தன் பழைய கல்லூரித் தோழிகளோடு மாமல்லபுரம் ரிசார்ட்டில் இரண்டு நாள்கள் டேரா அடித்து, அவர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். சிநேகிதிகளுக்குக் கை நிறைய, பைநிறைய கிஃப்ட் அளித்தாராம். புதுப்பிக்கப்பட்டிருக்கிற தன் பல்லாவரம் வீட்டையும் பார்த்துச் சென்றிருக்கிறார் சமந்தா.

---------------------------------------

சில நாள்களுக்கு முன்னால், கமல்ஹாசன் - அ.வினோத் இருவரும் பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமன் அறக்கட்டளையைச் சேர்ந்த விவசாயிகளைச் சந்தித்தனர். அடுத்த சில நாள்களிலேயே கமலின் அடுத்த படத்தை இயக்குவது அ.வினோத் எனத் தகவல் வெளியாக, நெல் ஜெயராமனின் கதைதான் அது என ஆரூடங்கள் கிளம்பிவிட்டன. உண்மையில் நெல் ஜெயராமன் கதைக்கும், வினோத் ரெடி செய்திருக்கும் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையாம். உலகளாவிய விஷயங்களை ஒருங்கிணைத்து மாஸ் கமர்ஷியல் கதையை வினோத் உருவாக்கியிருக்கிறாராம். "வலிமை', "துணிவு' படங்களைப்போலவே கமல் படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவமாம்.

---------------------------------------

கோலிவுட்டிலிருந்து பல இயக்குநர்கள் பாலிவுட்டிற்குச் சென்று வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.  அந்தவரிசையில் அட்லியும் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று தனது முதல் படமாக "ஜவான்' படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். டேவிட் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக இதுதான் அறிமுகமாகிறது. ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு எனப் பலர் இப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகின்றனர். இந்தி வெப்சீரிஸ்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி இப்
படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

---------------------------------------

தமிழில் "ரன்' படத்தின் மூலம் அறிமுமாகி பின் "சண்டக்கோழி', "ஆயுத எழுத்து' போன்ற படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மீன். அதனைத்தொடர்ந்து  மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த அவர் 2014-க்குப்  பிறகு படங்களில் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் சசிகாந்த்  இயக்கும்  "டெஸ்ட்'  படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். 

---------------------------------------

15 வருடங்களுக்குப் பிறகும் அனைவராலும் நினைவுகூரப்படும் படமாகச் சமீபத்தில் கொண்டாடப் பட்டிருக்கிறது சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்.' சமூக வலைதளங்களின் அமோக ஆதரவை ஏற்றுக்கொண்ட சசிகுமார், "இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்குகிறேன்' எனச் சொல்ல, அதற்கும் செம ரெஸ்பான்ஸ். ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் கையெழுத்திட்டிருக்கும் சசிகுமார், செப்டம்பர் மாதம் டைரக்ஷனை ஆரம்பிக்கிறார். இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் "ஆக்ஷன்' சொல்ல, நடிக்கப்போவது யார் தெரியுமா... இயக்குநர் அனுராக் காஷ்யப். ஆங்கிலேயர் கால அதிகாரி பாத்திரமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com