அப்பாஜி!

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப் பேரவைகளில் சுமார் 4,100  உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அப்பாஜி!


இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப் பேரவைகளில் சுமார் 4,100 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களிலேயே மிகவும் மூத்தவர் ஷமனூர் சிவசங்கரப்பாதான். 'அப்பாஜி' என்றே அவரை மக்கள் அழைக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட தெற்கு தவண்கரே சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினரான இவருக்கு வயது தொண்ணூற்று இரண்டு.
அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்அஜய்குமாரைவிடசுமார் 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஆறாவது முறையாக சிவசங்கரப்பா வெற்றி பெற்றார்.

இதுஒருபுறமிருக்க, வடக்கு தவண்கரே தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன். அவர் சிவசங்கரப்பாவின் மகன். தந்தையும் மகனும் பேரவையில்..!

1931-ஆம் ஆண்டு ஷமனூர்கல்லப்பாசாவித்திரியம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் சிவசங்கரப்பா. இவர் படித்தது அந்தக் காலத்து இன்டர்மீடியட் என்றாலும், பல கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். 'ஷமனூர்குழுமம்' என்ற பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி. இதைத் தவிர, விளையாட்டுஆர்வலரானஅவர், தவண்கரே கிரிக்கெட் கிளப்பின் தலைவரும் கூட. இதோடு, ஷமனூர் தவண்கரே டயமண்ட் கிரிக்கெட் அணியின் உரிமையாளரும் ஆவார்.

கர்நாடகத்தில் தனது சொந்தப் பயணங்களுக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தும் வெகு சிலரில் சிவசங்கரப்பாவும் ஒருவர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, காங்கிரஸில் இருக்கும் சிவசங்கரப்பாவுக்கு முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது 1994ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில்தான்! காங்கிரஸூக்கு நிதி வசூல் செய்து தருவதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

'அகில இந்திய வீர சைவ மகா சபை' என்ற அமைப்பின் தலைவரான இவர், கர்நாடகாவில் தனது சமூக மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்கத் தலைவர். இதனால், அவருடைய சமூகத்தினரும், தொகுதி மக்களும்கூட 'அப்பாஜி' என்றே பாசத்துடன் அழைக்கின்றனர்.

சூப்பர் சீனியர் எம்எல்ஏவான சிவசங்கரப்பாவுக்கு முதுமை காரணமாக, உதவி இல்லாமல் நடக்க முடியவில்லை; குரல் ஒடுங்கிவிட்டது.

ஆனாலும் கூட தேர்தலில் பிரத்யேக மின் ஊர்தியை பயன்படுத்தி, தொகுதியின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து பெற்றியும் பெற்றார். அவருக்கு ஆதரவாக அவருடைய மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என உறவினர்கள் படையே களத்தில் இறங்கியது.

பிரசாரத்தின்போது ஒரு நிருபர் சிவசங்கரப்பாவிடம், உங்களுக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார். இதற்கு 'யாருக்குதான் ஆசை இருக்காது? நான் பல பெரிய தொழிற்சாலைகளை நிர்வகிப்பவன்; ஏராளமான கல்லூரிகளை நடத்துபவன். எனக்கு நல்ல நிர்வாகத் திறமை உண்டு. கர்நாடகாவை ஊழல் இல்லாத மாநிலமாக்க என்னால் முடியும்!' என்றார். அவர் சொன்னது அப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com