திரைக்  கதிர்

'டான்-  படத்தைப் பெரிய அளவில் சக்சஸ் செய்திருந்தாலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்த படம் அமைவது பெரிய குதிரைக் கொம்பாகிவிட்டது.
திரைக்  கதிர்
Updated on
2 min read

'டான்-  படத்தைப் பெரிய அளவில் சக்சஸ் செய்திருந்தாலும், இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்த படம் அமைவது பெரிய குதிரைக் கொம்பாகிவிட்டது. ரஜினி, விஜய் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை அணுகி கதை சொல்லி, கிட்டத்தட்ட ஓகே பண்ணிய சிபி சக்கரவர்த்திக்கு, சம்பள விஷயங்கள் சங்கடமாக அமைந்துவிட்டன. ஒரு வழியாகத் தெலுங்குப் பக்கம் போய் நானிக்குக் கதை சொன்னார் சிபி. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற கதையாக சிபி சொன்னாலும், தமிழ்ப் பக்கம் வருவதை நானி விரும்பவில்லையாம். சமீபத்திய 'தசரா-  படம் தெலுங்கில் கொண்டாடப்பட்டாலும், தமிழில் ஊற்றிக்கொண்டது. அதனால் சிபி சொன்ன கதையைத் தெலுங்கில் மட்டும் பண்ணலாம் எனச் சொல்லிவிட்டாராம் நானி. டிசம்பர் மாதம் ஷூட்டிங் ஸ்டார்ட்.

---------------------------------------

அஜித் சில வாரங்களாகவே ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே அஜித்திடம் விடியோ காலில் இயக்குநர் மகிழ்திருமேனி படத்தின் கதையைச் சொல்லிவிட்டார் என்றும், கதையைக் கேட்ட அஜித் இயக்குநர் மகிழிடம் தினமும் அது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், ஆச்சரியமான ஒரு விஷயம், படத்தின் கதை இன்னமும் ரெடியாகவில்லை என்பதுதான். அஜித் லண்டன் செல்வதற்கு முன்னர் கேட்ட ஒன்லைனும், சில சீன்களும் அவருக்கு அப்போது திருப்தியாக இருந்தது. ஆனால், அதன் பின்னர், முழுக்கதையும் ரெடியான பிறகு அஜித் சில திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். இப்போது வேறு ஒரு கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறார் மகிழ். 

---------------------------------------

அறிவியல் புனைவுகதை படைப்பான 'ப்ராஜெக்ட் கே-  படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படமாக மாற்றம் பெற்றிருக்கிறது. சான் டியாகோ காமிக்- கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது 'ப்ராஜெக்ட் கே- . அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது.  

---------------------------------------

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் டகுஷி- படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஆராத்யா- வை வெளியாகியுள்ளது. ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும். இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி பாடகர்கள் பாடியுள்ளனர்.'நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை...- என்ற மந்திர வரிகளுடன் பாடல்  தொடங்குகிறது. அது மெதுவாக நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்த விரும்பும் அனைத்து காதலர்களுக்கும் இது ஒரு கீதமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com