ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹார்மோன் குறைபாடு நீங்க.

என் வயது 65. தூக்கமின்மை, மனநிலை தடுமாற்றம், எலும்புத் தின்மை நிறைக் குறைவு, சோர்வு, ஆற்றல் இழப்பு, மனச் சோர்வு, தசை வெகுஜனக் குறைவு என்றெல்லாம் ஏற்பட்டு, பரிசோதனை செய்ததில்...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹார்மோன் குறைபாடு நீங்க.

..
என் வயது 65. தூக்கமின்மை, மனநிலை தடுமாற்றம், எலும்புத் தின்மை நிறைக் குறைவு, சோர்வு, ஆற்றல் இழப்பு, மனச் சோர்வு, தசை வெகுஜனக் குறைவு என்றெல்லாம் ஏற்பட்டு, பரிசோதனை செய்ததில் டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன்.  இந்தக் குறைபாடு நீங்கி, உடல் உற்சாகத்துடன் செயல்பட ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

தாமோதரன், கோவை.

ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் உணவுமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுதானியங்கள், பால், முட்டை, மாமிச உணவு, காய்கறி, கீரை, பழங்கள் என்று நல்ல வகையான உணவுகளை, பசி உள்ள நிலைகளில் சாப்பிட வேண்டும். 

அமுக்கராக்கிழங்கு, எட்டிமரவிதை, சித்தாமுட்டி வேர், பூனைக்காலி விதை, நெருஞ்சில் விதை, குங்குமப்பூ, முள்ளிலவு மரவிதை, ஜாதிக்காய், சிலாசத்து, மகரத்வஜம், வெள்ளை முசிலி ஆகியவற்றைக் கொண்டும், அதில் மிக நுண்ணிய அளவில் சேர்க்கப்படும் தங்க பஸ்மத்தையும் உள்ளடக்கிய கேப்ஸ்யூல் ஒன்றை உணவின் நடுவே சிறிது தண்ணீருடன் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் ஹார்மோன் குறைப்பாட்டை நன்றாகக் குறைக்கலாம்.

தேன் குழைத்த அமுக்கராகிழங்கு சூரணத்தையும் உணவின் நடுவே சாப்பிட்டு வர, நல்ல பயன்களை ஆண்களுக்கு அளிக்கக் கூடியது. ஒரு நாளில் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டால் கூடப் போதுமானது.

தொடர்ந்து செய்யக் கூடிய உடற்பயிற்சிகளாலும் கூட இந்த ஹார்மோனை நாம் வளர்த்துகொள்ள முடியும். பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்ற எதிர்ப்புப் பயிற்சி செய்யும் ஆண்களுக்கு இந்த ஹார்மோன் குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை விளக்குகிறது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வதற்குப் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

ஆரோக்கியமான எடையை உடையவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. பருமனான உடல்வாகு உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் தட்டுப்பாடு உடலில் ஏற்படும் என்பதால், உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் சீரான எடையை உடலில் நிலைத்து நிறுத்துவதும் அவசியமாகும். துத்தநாகம், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவு வகைகளால் இந்த ஹார்மோனை நாம் வளர்த்துகொள்ளலாம்.

அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ஹார்மோன் குறைந்துவிட வாய்ப்புள்ளதால், அதைச் சமாளிக்க தியானப் பயிற்சி, யோகப்பயிற்சி, தளர்வு நுட்பங்கள் போன்றவை உதவிடக் கூடும்.

இரவில் உறக்கம் சுமார் 78 மணி நேரமாவது இருக்க வேண்டும். ஆண்களுக்கு இதன் மூலம் இந்த ஹார்மோன் வளர்ச்சியானது நிறைவாக ஏற்படும். ஆயுர்வேத மருந்தாகிய சுஜஅஸ்வகந்தாதி லேஹியம் எனும் மருந்தை இரவு படுக்கும் முன் சுமார் பத்து கிராம் நக்கிச் சாப்பிட்ட பின்னர், சிறிது சூடான பால் சுமார் நூறு மில்லி  அருந்துவது, ஆண்களுக்கு நல்ல உடல்வலுவை அளிக்கக் கூடியதாகும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு  இம்மருந்தை சாப்பிட முடியாது.  அதற்கு மாற்றாக, வெறும் அஸ்வகந்தாதி லேஹியம் என்ற பெயரில்  அவர்கள் சாப்பிடலாம்.

நெருஞ்சில் விதை நீங்கள் குறிப்பிடும் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்து அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் தன்மையில் மிகவும் சிறந்தது. வெந்தயத் தூளுக்கு இந்தச் சக்தி உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துயிருக்கிறார்கள்.  ஐந்து கிராம் வீதம் இருதூள்களையும் சூடான பாலுடன் (150 மில்லி) கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிடலாம்.

சிலாசத்து தனி ஒருவராக நின்று போராடி, நமக்கு இந்த ஹார்மோன் உருவாவதை உறுதிப்படுத்துகிறது. ஒரு கேப்ஸ்யூல், மாலை ஏழு மணிக்கு, சிறிது சூடான பாலுடன் (150 மிலி) சாப்பிட மிகவும் நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com