பெண்கள் தீவு..!

பெண்கள் தீவு..!

கேரளத்துக்கு அருகே அரபிக் கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு.  இந்தத் தீவுக் கூட்டத்தில் இரண்டாவது பெரிய தீவு மினிக்காய். 

கேரளத்துக்கு அருகே அரபிக் கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு.  இந்தத் தீவுக் கூட்டத்தில் இரண்டாவது பெரிய தீவு மினிக்காய். 
மாலத்தீவுக்கு நிகரான எழில்மிகு கடற்கரைகள், பரந்து விரிந்த வெள்ளை மணற்பரப்பு, அழகிய ரிசார்டுகளின் அழகு நமது அரபிக் கடலில் அமைந்துள்ள மினிகாய் தீவிலும் இருக்கின்றன.  இதில்,  நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் சிறந்த இடம்.  இந்தத் தீவைச் சுற்றிப் பார்க்க குளிர்காலமும், கோடைக்கு முந்தைய காலமும் ஏற்றது. கோடைக்காலம் இங்கு மிகுந்த வெப்பமயமாக இருக்கும். தற்போது சிறந்த சீதோஷ்ண நிலை நிலவும்.
இந்த இடத்தின் பண்டைய பெயர் மகிலாடு. அதாவது,  பெண்கள் தீவு என்று பொருள். ஜசிரத் அல் - மாலிகு என்று அறியப்படும் அரேபிய வணிகரின் ஒரு சொல்லிலிருந்து இந்தப் பெயர் தோன்றியது.  
ஆங்கிலேயர் இத்தீவில் இறங்கி சுற்றி வந்த போது, உள்ளூர்வாசியை பிடித்து இத்தீவின் பெயரை கேட்டுள்ளார். அவர் மாலிகு என கூறியுள்ளார். மினிக்கா ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர் என தெரிந்துகொண்டு மாலிக்குவையும், மினிக்காவையும் இணைத்து மினிக்கா ஆனது. 
ஆங்கிலேயரால் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 170 அடி உயரம் கொண்ட பழைமையான லைட்ஹவுஸ் சுற்றுலாவாசிகளைக் கவருகிறது.
இதுதான் விமான ஓடுதளம் உள்ள ஒரே தீவு, இந்த அகத்தி தீவு. மாலத்தீவைப் போல் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக நன்கு அறியப்பட்ட இடம். லட்சத்தீவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. லட்சத்தீவில் ஸ்கூபா டைவிங் செய்யவும் இடமுள்ளது. இயற்கையின் மாயாஜாலத்தை தெரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வழியாகும்.
நீர்வழி அல்லது வான் வழியாக மட்டுமே  இங்கு வர முடியும்.   அகத்தி விமான நிலையத்தில் இறக்கி மினிக்காய் தீவுக்கு செல்ல முடியும். நீர் வழி என்றால் கொச்சியிலிருந்து பயணிகள் கப்பல்கள் பல இயக்கப்படுகின்றன. அதில் முன்பதிவு செய்துவிட்டுச் செல்லலாம்.
நேரடி விமானங்கள் அகத்தி தீவுக்கு கிடையாது. கொச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து செல்லலாம். விமானக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com