
உலகின் மிகப் பெரிய தலைமையகமான பென்டகன் அலுவலகமானது ஐந்து கோணங்கள், 35 எக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட கட்டடமாகும். எந்த அளவு பெரிய கட்டடம் பென்டகன் என்றால், இது அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் சிடியே பென்டகனின் ஐந்து பகுதிகளில் ஒரு பகுதிக்குள் அடங்கிவிடும். இதனுள் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்க ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பென்டகன் நிர்வாகம் கொண்டது.
உலகின் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க ராணுவம் தனது ரகசியக் கோப்புகள் மற்றும் ஆயுதங்களை பென்டகன் கட்டடத்தின் உள்ளே பாதுகாக்கிறது. பென்டகனுடன் நேரடித் தொடர்பில் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து இருப்பார்.
பல இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பென்டகன் சுற்றுலாப் பயணி பயங்கரவாதியாக இருந்துவிடக் கூடாது என்பதால், இவர்களது பின்னணி குறித்த தகவல்களை பென்டகன் அதிகாரிகள் மிகக் கறாராக சோதனை செய்வது அவர்களது கடமையாகும்.
மூன்றே நாள்களில் பென்டகன் புளூ பிரின்ட்டை 1941-ஆம் ஆண்டில் பிரிகேடியர் ஜெனரல் பிரஹோன் சோமர்வெல் தயார் செய்தார். அதன்படி ஜூலை 17-இல் பென்டகன் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கின.
தினமும் 10 ஆயிரம் கார்கள் நிற்கும் அளவுக்கு பென்டகன் கட்டடத்தில் வெளியே உள்ள பல ஏக்கர் பார்கிங் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது. மிகப் பெரிய இந்த பார்க்கிங் பகுதியில் கார்கள் வந்து போன வண்ணம் இருக்கும்.
ஷிஃப்ட் முறையில் 24 மணிநேரமும் பென்டகன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் இங்கு ஊழியர்கள் கூட்டம் குறையவே குறையாது.
பென்டகன் உள்ளே கருப்பின, வெள்ளை இனப் பணியாளர்களுக்கு தனித்தனி இருந்த கழிப்பறை முறையை ரத்து செய்த முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட், அனைவரும் கழிப்பறையை பாகுபாடின்றிப் பயன்படுத்த வழிவகை செய்தார்.
2001 ஆம் ஆண்டு செப்.,11-ஆம் தேதி, பென்டகனின் 60-வது ஆண்டு விழாவின்போது, அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த விமானத் தாக்குதலில் 200 ஊழியர்கள் உயிர் நீத்தனர். இதைத் தொடர்ந்து, 2003 -ஆம் ஆண்டு ஐந்து பில்லியன் டாலர் செலவில் பென்டகன் கட்டடத்தைச் சுற்றி வெடித் தாக்குதலைத் தாங்கும் அளவுக்கு உறுதியான நவீன கட்டுமானம் அமைக்கப்பட்டது.
- செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.