சிரி... சிரி...

என்னடி.. உங்க புது மேனேஜர் எப்படிப்பட்டவர்?ரொம்ப 'டஃப்' ஆனவர்!இருக்கட்டுமே. டஃப்'பானவரா இருந்தா பரவாயில்லை. தப்பானவரா இருக்கக் கூடாது..
சிரி... சிரி...

'என்னடி.. உங்க புது மேனேஜர் எப்படிப்பட்டவர்?''
'ரொம்ப 'டஃப்' ஆனவர்!''
'இருக்கட்டுமே. 'டஃப்'பானவரா இருந்தா பரவாயில்லை. தப்பானவரா இருக்கக் கூடாது..''

சம்பத்குமாரி, பொன்மலை.

'என்ன சார் உங்க டேபிளில் எருமை மாடு படம் வைச்சிருக்கீங்களே...?''
'ஆபிஸ் மேலதிகாரிகள் திட்டும்போதும், பொதுமக்கள் வந்து திட்டும்போதும் இந்தப் படத்தைப் பார்த்து பொறுமை காக்கத்தான்!''

கு.அருணாசலம், தென்காசி.

'வர வர வேலையே ஓட மாட்டேங்குது..''
'ஏன்? நீ வழக்கமாக பார்க்கிற செக்ஷன்தானே!''
'அதுக்காக.. தினமும் அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருக்கு முடியுமா சொல்லு?''

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'பையனோட ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததுல லேட் ஆயிடுச்சி சார்...!''
'எதுக்கு ஸ்கூல் போனீங்க?''
'பையன் தினமும் லேட்டா போறான்னு என்னை வரச் சொல்லியிருந்தாங்க சார்..''



'புகார்னா பெட்டியில போட்டுடுங்க சார்..''
''நீங்க அந்தப் பெட்டியைத் திறக்கிறதே இல்லைங்கிறதுதான் சார் என்னோட புகார்...''



'தூங்கறவங்களை எழுப்பறது மகா பாவம்னு நினைக்கிறவர் நம்ம மேனேஜர்..''
'அதுக்காக நான் தூங்கினப்ப என்னை ஆபீசுக்குள்ளேயே வச்சி பூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புறது மட்டும் பாவம் இல்லையா சார்..''



'பல பேர்கிட்ட கை நீட்ட எனக்கு எங்க கணக்கு வாத்தியார்தான் கற்றுகொடுத்தார்..''
'ஆமாம். அவர் கை மீது கம்பால அடிப்பாரு. நீங்க காசு கேட்கிறீங்களே...?''



'ஏட்டைய்யா. ஒரு குச்சியை கொடுத்து 'நினைத்ததை நடத்தும் மந்திரக் கோல் இது'ன்னு சொல்லி பல பேரை ஏமாற்றி பணத்தைக் குவிச்சிட்டான் இவன்.''
'சரியான 'கோல்மால்' பேர்வழின்னு சொல்லு!''



'ரண்டி.. ரண்டி.. பீரோ சாவி ஈயண்டி...''
'எது வேணும்னாலும் கேளு.. நானே என் பெண்டாட்டியை 'டி' போட்டு கூப்பிடறதில்லை...''



'நடந்த கொலையை நீ நேருக்கு நேரா பார்த்தியா...?''
'இல்லைங்க எஜமான். சைடு வழியாதான் பார்த்தேன்...''



'ரைட்டுல கையைக் காட்டிட்டு என்னய்யா லெப்டுல திரும்பறே..?''
'மழை தூறுதான்னு கையை நீட்டி பார்த்தேன் சார்...''

வி.ரேவதி, தஞ்சை.

'சார் பூட்டை உடைச்சி திருடன் நகையைத் திருடிட்டான்...''
'உன்னை யாரு பூட்டுக்குள்ளே நகையை வைக்கச் சொன்னது..''

நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

'ஏட்டைய்யா.. அந்தப் பட்டாசு கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைச்சிருந்தாராம்..''
'' எப்படி சொல்றே..''
'சரவெடி கேட்டா... எத்தனை முழமுன்னு கேட்குறாரே..''

நாஞ்சில் சு.நாகராஜன்,
பறக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com