திரைக்கதிர்

'ரத்தம்' படத்தின் புரொமோஷனுக்காக, துயரம் கடந்து விஜய் ஆண்டனி வந்து நிற்க, ஊடகத்தினரே ஆடிப்போனார்கள்.
திரைக்கதிர்

'ரத்தம்' படத்தின் புரொமோஷனுக்காக, துயரம் கடந்து விஜய் ஆண்டனி வந்து நிற்க, ஊடகத்தினரே ஆடிப்போனார்கள். மகளை இழந்த சில நாள்களிலேயே தன்னால் ஒரு படம் பாதிக்கப்படக் கூடாது என மேடையேறினார் விஜய் ஆண்டனி. "ரத்தம்' படம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள் படத்துக்குப் பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. "பட புரொமோஷனுக்கு வர மாட்டோம் என்பதை பாணியாகவே வைத்திருக்கும் சில ஹீரோ, ஹீரோயின்ஸ் இதற்குப் பிறகாவது தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்' எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

--------------------------------------------------------

நீண்ட இடைவெளியை  நிரப்பி விட்டார் துருவ். மூன்று படங்களுக்கு வேண்டிய கதைகளையும் இயக்குநர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் முடிவு செய்துவிட்டார். மாரி செல்வராஜ் படம்... அதற்கடுத்து ஒரு படம் என முடித்துக் கொடுத்துவிட்டு சம்பளத்தை உயர்த்துவது பற்றி முடிவை எடுக்கவும் திட்டம் போட்டுவிட்டாராம். ஆச்சர்யம் என்னவென்றால், இதில் எந்த முடிவிலும் அப்பா விக்ரம் தலையிடவே இல்லை என்பதுதான்.

--------------------------------------------------------

கதைத் தேர்வில் அசத்தும் ஆர்யா, அட்டகாச லைன்அப் ரெடி செய்து வைத்திருக்கிறார். "எஃப்.ஐ.ஆர்.' படத்தை இயக்கிய மனு ஆனந்த், "நவம்பர் ஸ்டோரி' இயக்கிய இந்திரா சுப்பிரமணியன், "டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகி என வரிசையாக மூன்று இயக்குநர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறார் ஆர்யா. இந்த மூன்று படங்களை முடிப்பதற்கும், பா.இரஞ்சித் இயக்கத்தில் "சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும் என நினைக்கிறார் ஆர்யா. அதனால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆர்யா தேதி நிரம்பி வழிகிறது.

--------------------------------------------------------

அஜித் தனது லண்டன் பயணத்தை முடித்த கையோடு மகிழ்திருமேனியிடம் முழுக்கதையும் கேட்டுவிட்டார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் "விஸ்வாசம்' போல ஒரு எமோஷனல் போர்ஷனும் உள்ளது என்கிறார்கள். படத்தில் த்ரிஷா, ஆரவ், சஞ்சய் தத் எனப் பலரும் உள்ளனர். நடிகர்கள் தேர்வை மகிழ் திருமேனியின் சாய்ஸிலேயே விட்டுவிட்டார் அஜித்.இந்நிலையில் அஜித்தின் "விடா முயற்சி' அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள். அதைத் தொடர்ந்து துபை, அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து 50 நாள்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com