ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?

என் வயது 56. உணவுக்குப் பின்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 350 மில்லி என்ற அளவு உள்ளது. இதை எப்படி குறைப்பது?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?

என் வயது 56. உணவுக்குப் பின்னர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 350 மில்லி என்ற அளவு உள்ளது. இதை எப்படி குறைப்பது?

-ராஜரத்தினம், தஞ்சாவூர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை உபாதையைக் கண்டறியும் முறையான ஹெச்.பி. ஏ.சி. என்ற பரீட்சை மிக முக்கியமானது.  
2012-ஆம் ஆண்டு 13.5 என்ற மிக அதிக அளவில் இருந்த அதை 2023-ஆம் ஆண்டு 6.4  என்ற அளவுக்கு குறைத்துவிட்டதாகவும், அது எப்படி முடிந்தது என்பதை ஒருவர் 'கோரா டைஜஸ்ட்' எனும் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட தகவல்கள் தங்களுக்கு உதவிடக் கூடும்.
குறைவான அளவில் தைராய்டு சுரப்பி உள்ளதா என்பதைக் கண்டறியவும், அதைப் போலவே தன்னுடல் தாக்கு நோய் எனும் ஆட்டோ இம்யூன் தாக்குதல் உபாதை உள்ளதா என்பதையும் கண்டறியும் இரு உபாதைகளைக் கட்டுப்படுத்துவதால் ரத்த சர்க்கரையின் அளவு நன்கு குறைந்துவிடும்.
ஓரிடத்தில் இருபது நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்க வேண்டாம். எழுந்து நடந்து கொண்டே இருப்பதற்காக, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளவும்.
வாரத்தில் ஏழு நாள்களும் புஷ்அப் எனப்படும் கைகளைத் தரையில் ஊன்றி, உடலைத் தூக்கி இறக்கும் முறை நின்ற நிலையிலிருந்து அமர்ந்து எழும் முறையான ஸ்குவாட், கைகளைத் தரையில் ஊன்றி, கால்களை மலை ஏறும்போது எப்படி அசையுமோ அதைப் போன்று அசைக்கும் மௌன்டைன் க்ளைம்பர் எனும் உடற்பயிற்சி ஒரே இடத்தில் நின்றுகொண்டு கைகளைத் தூக்கி இறக்கியும் செய்யப்படும் குதிக்கும் முறையான ஜம்பிங் ஜாக்ஸ் போன்றவை காலையில் சுமார் நாற்பது நிமிடங்களாவது செய்ய வேண்டும்.
பளுதூக்கும் பயிற்சி வாரத்தில் மூன்று முறை,  மாலையில் நாற்பத்து ஐந்து விநாடிகள் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு, வேக வைத்த நிலக்கடலை ஆகியவை சுமார் நூறு கிராம், உப்பு சேர்க்காத வெண்ணெயுடன் காலையில் சாப்பிட வேண்டும். 
பதினைந்து கிராம் வெந்தயம், இரவு முழுவதும் வென்னீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். வெள்ளைச் சர்க்கரை, பாட்டில் பானங்கள், பாட்டிலில் விற்கப்படும் பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை அறவே சாப்பிடுவதை நீக்க வேண்டும்.
பதினைந்து நிமிடங்கள் தோட்டத்தில் செடிகளுக்கு நீர்விடுதல், பராமரித்தல், அமைதி தரும் மெல்லிசை கேட்டல், மன அழுத்தம் தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்.  குடிநீர் பாட்டிலைத் தவிர்த்து குழாய் நீரை கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாகச் சாப்பிட வேண்டும். 
மதிய உணவில் நிறைகறிகாய்களுடன் சிறிது புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் கலந்து சாப்பிடுதல், இரவு ஏழு மணிக்குள் வேக வைக்காத பச்சைக் கறிகாய்கள், பன்னீருடன் சாப்பிடுதல், இரவு 9.30 மணிக்குப் படுத்துறங்கவும். குறைந்தது ஏழு மணி நேரமாவது நன்றாக உறங்க வேண்டும். சிறுதானியங்களை உணவில் நிறைய சேர்த்தல் நல்லது. மைதாவையும் உப்பையும் குறைப்பது சிறந்தது. தாவர எண்ணெயைத் தவிர்த்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை உணவில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் டி பரிசோதனை செய்துவிட்டு, குறைவாக இருந்தால் வைட்டமின் கே2 சேர்த்து சாப்பிடுதல் வேண்டும்.
இவற்றால் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கலாம் எனும் அவருடைய கருத்துகள் வரவேற்றக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com