திரைக்கதிர்

மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொஞ்சமும் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியிருக்கிறது விஜய்யின் "லியோ.'
திரைக்கதிர்

மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொஞ்சமும் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியிருக்கிறது விஜய்யின் "லியோ.' எப்போதுமே கதை கேட்கும்போது மட்டுமே தன் தரப்பு கருத்தைத் தெரிவிக்கும் விஜய், படம் ரெடியாகும் நிலையில் எது குறித்தும் பேச மாட்டார். ஆனால், "லியோ' படத்தை எடிட் நிலையில் பார்த்தவர், இரண்டாம் பாதியைச் சரி செய்யச் சொன்னாராம். எடிட்டர் பிலோமின் ராஜும், "சில காட்சிகளை ரீஷூட் செய்யலாம்' என்றாராம். ஆனால், "படம் பக்கா' என்கிற மனநிலையில் எதையும் மாற்றாமல் பிடிவாதமாக அப்படியே ரிலீஸூக்குக் கொண்டுவந்தாராம் லோகேஷ் கனகராஜ்.

------------------------------------------

ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்த சம்பவத்தைப் பற்றி விவரித்த அட்லீ, "ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பைரோ அவருடைய நண்பர்களான முக்கிய இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படம் பார்த்திருக்கிறார். படத்தில் நெடுஞ்சாலையில் ட்ரக்குகளை பைக்கை வைத்து ஷாருக் சேஸ் செய்வதைப் போல சண்டைக் காட்சி ஒன்று இருக்கும். ஷாருக்கின் பைக் டயரிலிருந்து நெருப்புப் பொறிகளெல்லாம் பறக்கும்.அந்தக் காட்சியை பார்த்துவிட்டு ஸ்பைரோவின் நண்பர்கள் சிலர், 'இந்த ஸ்டண்ட் உங்களுடையதா?, இயக்குநருடையதா?'' என கேட்க, 'ஸ்பைரோ என்னைப் பற்றி கூறி அந்த ஸ்டண்ட் ஐடியா இயக்குநரான என்னுடையதுதான் என கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்ததுள்ளது'' என தெரிவித்துள்ளார் அட்லீ.

------------------------------------------

படங்களை ஒப்புக் கொள்வதில் நிதானமும் பொறுமையுமாக இருக்கிறார் "சீதா ராமம்' மிருணாள் தாகூர். சீதா ராமம் படம் வெற்றியடைந்த நிலையில் தெலுங்கில் நானியுடன் நடித்த "ட்ண் நான்னா', டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. நானியைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் "ஃபேமிலி ஸ்டார்' படத்திலும் நடிக்கிறார். படத்தை "வாரிசு' தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார். பொங்களுக்கு இந்தப் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் மிருணாள் தாகூருக்கு இன்னும் தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பில்லை. 

------------------------------------------

கமலின் "வேட்டையாடு விளையாடு' சில மாதங்களுக்கு முன்னர் ரீரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தயாரிப்பாளர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில் பலருக்கும் கமல் படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்து, அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர். தயாரிப்பாளர் தாணுவும், கமலை வைத்து தான் தயாரித்த "ஆளவந்தான்' படத்தை மறுவெளியீடு செய்கிறார். இந்திய சினிமாவின் கல்ட் கிளாஸிக்கான, கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவான "நாயகன்' படமும் இப்போது ரீரிலீஸ் ஆகிறது. அது போல் கமலின் "விக்ரம்' படத்தையும் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. "மூன்றாம் பிறை'யும் இந்த பட்டியலில் இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com