சிரி... சிரி...

'அந்தக் கடையில் திருடியவன் யாருன்னு சி.சி. டி.வி. காமிரா பார்த்து கண்டுபிடிச்சாட்டாங்களா..?''அவன் சரக்கடிச்சிட்டு இருப்பான் போல.. வீடியோ மொத்தமும் ஷேக்கியா இருக்காம்!'
சிரி... சிரி...

'அவரோட வியாபாரம் கொடி கட்டி பறக்குது..'
' என்ன விற்கிறார்?'
' கொடி!'

------------------------------------------------------------------------------------------------------------------------
 
'என்னப்பா இது. மினி  மசால் தோசை கேட்டேன். வெறும் மசாலா கொடுத்திருக்கே?'
'கிழங்குக்குள்ளே தோசை இருக்கு பாருங்க சார்..'

-மேற்கு மாம்பலம் லெ.நா.சிவக்குமார்,
சென்னை.

'ஆதாரம் இருக்குதான்னு கேட்டா இட்லி, வடைகறி இருக்குன்னு அவரு சொல்றாரு?'
'அவரோட காதில் ஆகாரமுன்னு கேட்டிருக்கும்!'

-பர்வதவர்த்தினி,
பம்மல்.

'வாட்ச்மேன் பீடிகையோடுதான் எப்பவும் பேசுவார்'
'அப்படியா?'
'ஆமா. இப்போ கூட அவரோட கையில் பீடி இருக்குது பார்'

------------------------------------------------------------------------------------------------------------------------

'டில்லி பாதுஷா புதுசாப்பா..?'
'ஆமாம் சார்..'
'அப்போ புதுதில்லி பாதுஷான்னு சொல்லுங்க..?'

------------------------------------------------------------------------------------------------------------------------

'உங்களுக்கு கடன் கொடுக்கறவங்களைப் பிடிக்குமா?, கேட்கறவங்களைப் பிடிக்குமா?'
'கடன் கொடுத்துட்டு கேட்காதவங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்!'

------------------------------------------------------------------------------------------------------------------------

'அந்தக் கடையில் திருடியவன் யாருன்னு சி.சி. டி.வி. காமிரா பார்த்து கண்டுபிடிச்சாட்டாங்களா..?'
'அவன் சரக்கடிச்சிட்டு இருப்பான் போல.. விடியோ மொத்தமும் ஷேக்கியா இருக்காம்!'

-வி.ரேவதி,
தஞ்சை.

'நான் எந்த பிராஞ்சுலேயும் ஒரு வருஷத்துக்கு மேலே இருக்க மாட்டேன். டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடுவேன்..'
'ஏன் அப்படி?'
'ஒரு வருஷம் வரைக்கும்தானே கடன் கொடுத்தவங்க அமைதியா இருப்பாங்க?'

-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.

'அந்த ஹோட்டலில் கூட்டம் அள்ளுதே..?'
'ஒரு  கப் சாம்பார், ஒரு கப் சட்னி வாங்கினால் இரண்டு இட்லி இலவசமாம். 
தள்ளுபடி ஆஃப்பராம்..'

-மஞ்சுதேவன்,
பெங்களூரு.

'ஏன்யா ஆபிசுக்கு லேட்டா வர்றே..'
'வீட்டில் தூங்கிட்டேன் சார்..'
'வீட்டிலேயே தூங்க வேண்டியதுதானே..'
'வீட்டில் தூங்கினால் சம்பளம் வராதே..!'

------------------------------------------------------------------------------------------------------------------------

'என்னம்மா சரியா பெருக்க மாட்டேங்குறே..!'
'நான் டயட்டில் இருக்கேன்..'

------------------------------------------------------------------------------------------------------------------------

'நீங்கதான் குடிக்க மாட்டிங்களே. அப்புறம் ஏன் குடியை மறக்க மருந்து சாப்பிடறீங்க..?'
'மறந்து போய் சாப்பிட்டேன்..'

- தீபிகா சாரதி,
சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com