பேல் பூரி

ஒரு சொல்லுக்கு குழந்தை அடங்கிப் போனதென்பது கடந்த காலம்.ஒரு 'செல்'லுக்கு குழந்தை அடங்கிப் போவது நிகழ்காலம்.
பேல் பூரி

கண்டது


(உடுமலைப்பேட்டை அமராவதி நகர் சாலையில் உள்ள ஓர் உணவகத் தின் பெயர்)

''உண்டு மகிழ்''

-அருள்மொழி ஜெயராமன்,
சேலம்

(திருப்பாப்புலியூரில் உள்ள ஒரு பள்ளியின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது)

முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். முயலாமை வெல்லாது.

-என்.நிரஜா,
(திருப்பாப்புலியூர்.

(செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

''நெடுமரம்''

-குலசை நஜீமுதீன்,
மாம்பாக்கம்.

கேட்டது


(திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இரு நண்பர்கள்)

''இன்னும் ரெண்டு நாள் இருந்து தங்கிட்டு போகலாமே?''
''அதுக்கென்ன? வாங்க வீட்டுக்குப் போகலாம்.''
''சரி. சரி.. பஸ்சுல ஏறிட்டீங்க? ஊருக்குப் போயிட்டு வாங்க.. அடுத்த முறை தங்கிக்கலாம்.''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(திருச்சியில் உள்ள பிரபல துணிக்கடையில் ஊழியரும், பெண் வாடிக்கையாளரும்..)

''இந்த சேலை என்ன விலை?''
''ஆயிரத்து இருநூறு ரூபாய்..''
''அடேய்ங்கப்பா! அந்தச் சேலை...''
''அது ரெண்டு அடேய்ங்கப்பா...''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

(கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே பெண்ணும், பயணியும் பேசியது)

''அய்யா. இங்கு மூத்திர சந்து எங்க இருக்கு..''
''ஏம்மா அதை கேக்குறே?''
''அங்கதான்யா என் புருஷன் குடிச்சிட்டு கிடப்பான்.''

-க.கலா,
காகிதப்பட்டறை.

யோசிக்கிறாங்கப்பா!


ஒரு சொல்லுக்கு குழந்தை அடங்கிப் போனதென்பது கடந்த காலம்.
ஒரு 'செல்'லுக்கு குழந்தை அடங்கிப் போவது நிகழ்காலம்.

-பி.பால் ராமமூர்த்தி,
அம்பாசமுத்திரம்.

மைக்ரோ கதை


ஆவடியிலிருந்து தாம்பரத்துக்கு ஆட்டோவில் செல்ல, இணையதளத்தில் புக் செய்தார் செல்வா. உடனே ஆட்டோவும் வர, தனது மனைவி மல்லிகாவுடன் ஏறி
பயணித்தார்.

தாம்பரம் சென்றவுடன் புக் செய்தபோது, காட்டிய ரூ.830-ஐ செல்வா அளிக்க ஆட்டோ ஓட்டுநர் சந்திரனோ, ''ரூ.950 தாருங்கள்'' என்றார்.

''ஏன் இப்படி செய்கிறீர்கள்'' என்று செல்வா கடுப்பாய் கேட்க, '' காசை சீக்கிரம் கொடுங்கள்'' என்று ஓட்டுநரும் கறாராக வாங்கிச் சென்றார்.

கூடுதல் தொகை வாங்கிய மகிழ்ச்சியில் சந்திரன் பிற்பகலில் உணவகம் முன் ஆட்டோவை நிறுத்தி, சாப்பிடச் சென்றார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, ஆட்டோவை காணா மல் பதறினார்.

அங்கே இருந்த சிலர், ''நோ பார்க்கிங்கில் ஆட்டோ நிறுத்தியதால், டிராபிக் போலீஸ் தூக்கிட்டு போயிட் டாங்க? அபராதம்கட்டி எடுத்துட்டு வாங்க?'' என்றார்.

அப்போதுதான் காலையில் ரூ.120 அதிகம் வாங்கிய சவாரி நினைவுக்கு வந்ததுசந்திரனுக்கு..?

-எம்.மனோஜ்குமார்

எஸ்எம்எஸ்


வாழ்க்கையில் சரிவுகளைச் சந்திக்காமல்
சாதனைகளைச் சந்திக்க முடியாது.

-இசைவாணி,
பாளையங்கோட்டை.

அப்படீங்களா!

முந்தைய 'ட்விட்டர்', தற்போதைய 'எக்ஸ்'ஸில் புதிய சேவையாக ஆடியோ, விடியோ அழைப்புகள் விரைவில் மேற்கொள்ளலாம் என அதன் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சைகள் தொடங்கின. ட்விட்டர் பயன்பாட்டாளர்களை தங்கள் வசம் இழுக்க மெட்டா, கூகுள் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நீண்ட காலமாக பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த ஆடியோ, விடியோ அழைப்பு சேவை தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தும்போது பயன்பாட்டாளரின் கைப்பேசி எண்ணைப் பகிர தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள 'டேரெக்ட் மேசேஜ்' என்பதற்குள் சென்று தேர்வு செய்ய வேண்டும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, கணினி பயன்பாட்டாளர்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும். அனைத்து சேவைகளும் அடங்கிய ஒரே பயன்பாட்டு இடமாக எக்ஸ் மேம்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வேலை தேட உதவும் சமூக ஊடகமான லிங்கிடனைப்போல், எக்ஸ்-யிலும் 'ஹயரிங்ஸ்' எனும் புதிய சேவையும் அறிமுகமாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டும் இந்தச் சேவை வழங்கப்படும் என்றும் வேலை தேடுபவர்கள் அந்த நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் எக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக ஊடகத்தின் இந்த புதிய சேவைகள் பயன்பாட்டளர்களைக் கவரும்.

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com