பேல்பூரி

'வாழ்க்கையே வேடிக்கைதான். ஒன்றும் இல்லாமல் வருகிறோம். எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறோம். ஒன்றுமில்லாமல் விடை பெறுகிறோம்.'
பேல்பூரி

கண்டது


(திருப்பனந்தாள் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர்)

'பட்டம்'

-மதிராஜா திலகர்,
சின்னபுங்கனேரி.

(தஞ்சாவூரில் உள்ள வழக்குரைஞர் அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்தது)

'நீங்கள் செய்த தவறை ஒத்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 
விரைவில் சரி செய்துவிடலாம்.  ஆனால் தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள். ஒருபோதும் சரி செய்துவிட முடியாது.'

-ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

(திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'காரணம்பேட்டை'

-இலக்கியவாணி,
பாளையங்கோட்டை.

கேட்டது

(தஞ்சாவூர் பாலாஜி நகர் டீக்கடை வாசலில் இருவர் பேசியது)

'என் பேரு ராமசாமி.  இதே பாலாஜி நகரில் குடியிருக்கேன்...'
' இதை ஏன் என்கிட்டே சொல்றே...'
'நீ அட்ரஸ் தெரியாதவங்களுக்கு அஞ்சு ரூபாய் கூட கடன் தர மாட்டேனுன்னு சொன்னேயே..!'

-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.

(ராமநாதபுரம் மாவட்டம் வேம்பாரில் தனியார் பஸ் ஓட்டுநரும், இளம்பெண்ணும் பேசியது)

'வாடகை கொடுத்திட்டு போங்க?'
'வாடகையா?, நானா குடிவந்தேன். வாடகை கொடுக்க..?'

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

(திருச்சியில் உள்ள ஒர் வங்கியில் பேசியது)

'எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்கவே மாட்டேங்குது?'
'அடிக்கடி என்கிட்ட பணம் கொடுத்து வையுங்க..? உங்களுக்குத் தேவைப்படும்போது கொடுக்கறேன்.'
'அதுக்கு என் கையே தேவலாம்...'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

'வாழ்க்கையே வேடிக்கைதான். 
ஒன்றும் இல்லாமல் வருகிறோம். எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறோம். 
ஒன்றுமில்லாமல் விடை பெறுகிறோம்.'

-இசைவாணி,
திருநெல்வேலி.

மைக்ரோ கதை

சங்கரன்கோவிலுக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து வந்த சங்கர், தொடக்கப் பள்ளியில் படித்த தனது நண்பர் மகேஷின் வீட்டுக்குச் சென்றார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர்,  சில ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் குரூப்பில் அரட்டை அடித்துகொண்டிருக்கும் நண்பனைக் காணும் மகிழ்ச்சியில் சங்கரும் சென்றார்.
தான் வருவதை முன்கூட்டியே மகேஷுக்கு சொன்னதால்,   சங்கரை வரவேற்று அழைத்துச் சென்றார். 
வீட்டு ஹாலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தனது மனைவியை காபி போடும்படி  மகேஷ் சொன்னார்.  பத்து நிமிடங்களாக சமையலறையில் ஒரே உருட்டல் சத்தம். ஆனால், மகேஷும் கண்டுகொள்ளவில்லை. ' நண்பனின் மனைவி கொடுமைக்காரியாக இருப்பாளே?' என்று சங்கருக்கு சந்தேகம்.
சில நிமிடங்கள் கழித்து,  மகேஷின் மனைவி காபி டம்ளர்களை எடுத்து வந்து அளித்தார். அப்போது மகேஷ், 
'என் மனைவிக்கு பார்வை கிடையாது. அதான் லேட்' என்றார். 
'ஆஹா. தவறாக நினைத்துவிட்டோமே' என்று சங்கரும் மனம் நொந்தார்.

கு.அருணாசலம்,
தென்காசி.


எஸ்எம்எஸ்


உள்ளது இறைவன் கொடுத்தது; 
இல்லாதது இறைவன் கொடுக்கப் போவது!

கலைச்செல்வி,
கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!

பொழுதுபோக்குக்காக,  2004-இல் தொடங்கப்பட்ட சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் காலத்துக்கு ஏற்ப ஏராளமான புதிய சேவைகள் அறிமுகமாகி வருகின்றன. 

புகைப்படங்கள் மட்டும் பகிரப்பட்டு வந்த நிலையில்,  விடியோ, ரீல்ஸ், லைவ் என ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஒரே பயனாளருக்கு சொந்தம், பணி என்ற இரு வழியில் உள்ள உறுப்பினர்களைப் பிரிக்கும் வகையில் பல்வேறு புரொபைல்களை உருவாக்கும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. 

ஒரே ஃபேஸ்புக் கணக்கை வைத்து கொண்டு புரொபைல்களை மட்டும் மாற்றிக் கொண்டு,  அதில் உங்களை பின்தொடர்பவர்களை தனித் தனியாகச் சேர்க்கலாம். 
ஒரே நபர் தனித் தனி கணக்குகளுக்காக ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. தனித் தனி புரொபைல்களில் தனி பெயர், போட்டோக்களை வைத்து கொள்ளலாம். ஒரு கணக்குக்கு அதிகபட்சமாக 4 புரொபைல்களை உருவாக்கி கொள்ளலாம். கூடுதலாக உருவாக்கப்படும் புரொபைல்களில் மார்க்கெட் பிளேஸ், பேமென்ட்ஸ் போன்ற கூடுதல் சேவைகள் கிடைக்காது.

 புதிய புரொபைலை உருவாக்க முதலில் உங்கள் புரொபைல் பெயரை கிளிக் செய்து மற்றொரு புரொபைலை உருவாக்க வேண்டும். அதற்கு மாற்று பெயர், போட்டோவை வைக்கலாம். அந்த புரொபைலுக்கு ஏற்ப உங்கள் உறுப்பினர்களை சேர்த்து கொள்ளலாம். இதேபோல் உருவாக்கப்படும் மாற்று புரொபைல்களை தேவைக்கு ஏற்ப மாற்றி முகப்பில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சேவையை ஃபேஸ்புக் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது.  

அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com