பேல் பூரி
By DIN | Published On : 02nd April 2023 12:00 AM | Last Updated : 02nd April 2023 12:00 AM | அ+அ அ- |

கண்டது
(திருநெல்வேலி மாவட்டத்தில் 'கண்டுகொண்டான்' எனும் ஊர் அருகேயுள்ள சிற்றூரின் பெயர்)
'வாடி''
-கே.எல்.புனிதவதி,
கோவை.
(மயிலாடுதுறையில் கார் ஒன்றின் பின்புறம்)
'நீந்திக் கரையேறு. இல்லையேல் மூழ்கிவிடு''
சோ.மாணிக்கம்.
(சென்னை திருவள்ளூர் இடையே பெரியபாளையத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'மோரை''
-ஏ.எஸ்.ரவீந்திரன்,
விருதுநகர்.
(ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள இரு ஊர்களின் பெயர்கள்)
'கீழமுடியமன்'', 'கொட்டலி''
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை74.
கேட்டது
(தென்காசியில் உள்ள வீட்டில் இரு பெண்கள் பேசியது)
'சூடா. ஊத்தப்பம் ஒண்ணுன்னு உன் கணவர் குரல் கொடுக்கிறார்!''
'பொறுமையா பாரு! அவரே எழுந்து போய் ஊத்தப்பம் போட்டு எடுத்து வந்திருக்கார்!''
கு.அருணாசலம்,
தென்காசி.
(சிதம்பரம் வ.ஊ.சி. தெருவில் ஒரு வீட்டில் கர்ப்பிணியும், அவரது சிறுவயது மகளும்)
'மம்மி. உன் வயிற்றுல என்ன இருக்கு!''
'உன்னை மாதிரி இன்னொரு குட்டிப் பாப்பா''
'உனக்குப் பிடிக்குமா?''
'ரொம்ப பிடிக்கும்!''
'அப்புறம் எதுக்கு அதை சாப்பிட்ட?''
அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
(திருச்சி பாலக்கரை அருகேயுள்ள அம்மன் கோயிலில் இரு நண்பர்கள் பேசிக் கொண்டது)
'டேய். நம்ம 'தல' இந்த கோயிலுக்கு வந்திருக்கார் போலிருக்கே!''
'எப்படிடா சொல்றே!''
'பின்னே அந்த மாதத்துல 'தல விருட்சம்'-என்னு போட்டிருக்கே!''
'வாயை மூடிட்டுவா! யாராவது கேட்டா குட்டுவாங்க!''
சம்பத்குமாரி,
பொன்மலை.
யோசிக்கிறாங்கப்பா!
வெறுங்கல் வேண்டாதப் பொருளாகிறது.
செதுக்கிய சிற்பம் கடவுளாகிறது.
- பொறிஞர் ப நரசிம்மன்,
திருச்சி.
மைக்ரோ கதை
வங்கியினுள் மேலாளர் அறைக்குச் சென்ற அமுதன், 'சார்! உங்க வங்கியோட ஏ.டி.எம்இல் பணம் எடுத்தேன், ரூபாய் நோட்டு கிழிந்து வந்திருக்கு!'' என்றான்.
'அதுக்கு இப்ப என்ன சார் பண்ணனும்?'' என அலட்சியமாக பதிலளித்தார் மேலாளர்.
'ரூபாய் நோட்டை மாத்திக்கொடுங்க, சார்!''
'அதெல்லாம் இங்க பண்ண முடியாதுங்க!''
'உங்க ஏ.டி.எம்.இல் இருந்து எடுத்த பணம் கிழிஞ்சிருந்தா நீங்க தானே மாத்தித் தரணும்!'
'எங்களுக்கு நிறைய வேலை கிடக்குது. நீங்க வேணா போஸ்ட் ஆபிஸ்லயோ, வேற வங்கியிலயோ கொண்டு போய் மாத்திக்குங்க!''
'ரெண்டாயிரம் ரூபாய். கிழிஞ்சதை வெச்சிட்டு நான் மட்டும் என்ன பண்றது. நீங்களே வெச்சுக்குங்க!'' என்று கொடுத்தான் அமுதன்.
'உங்கப் பணம் எனக்கு எதுக்கு?'' என வாங்க மறுத்தார் மேலாளர்.
'அப்ப இந்த ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீங்க வாங்க மாட்டீங்க?''
'மாட்டேன்!''
'ரொம்ப தேங்கஸ், சார்!'' என்று அங்கிருந்து கிளம்பினான் அமுதன்.
அந்த நேரம் மேலாளர் அறைக்குள் படபடக்க வந்த ஏ.டி.எம். காவலாளி, 'சார்... சார்..'' எனக் கத்தினார்.
'என்னப்பா என்னாச்சு?''
'நம்ம ஏ.டி.எம்இல் 500 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய பாக்ஸில் 2000 ரூபாய் நோட்டை மாத்தி வெச்சிட்டாங்கலாம்!''
'இதுவரை யாரும் பணம் எடுக்கலையே?''
'ஒரே ஒருத்தர் மட்டும்தான் எடுத்திருக்கிறார், அவர் இப்பத்தான் உங்க ரூம்மில் இருந்து வெளியே போறார்!''
'அய்யய்யோ! போங்க போயி அவரைப் பிடிங்க!'' என மேலாளர் பதறி ஓடினார்.
நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்
எஸ்எம்எஸ்
செல்லும் பாதை சரியாக இருந்தால்...
வேகமாக அல்ல; மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!
ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆஃப் பயன்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து புதிய சேவைகளை மெட்டா நிறுவனம் அறிவித்து வருகிறது.
விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என மூன்று மென்பொருள்களை வாட்ஸ் ஆஃப் அளித்து வருகிறது. இது வாட்ஸ் ஆஃப்பை கணனி, கைப்பேசி, மடிக்கணினி, டேப் ஆகியவற்றில் பயன்படுத்த உதவுகிறது. தற்போது கணினி வழி வாட்ஸ் ஆஃப் அடையாளத்தை மாற்றும் வகையில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, கணினி வாட்ஸ் ஆஃப் பயன்படுத்த இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை 'வாட்ஸ்ஆஃப்.காம்' டவுன்லோடு என்ற தளத்துக்கு சென்று விண்டோஸ் பயன்பாட்டுக்கு ஏற்ப பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் வாட்ஸ்ஆஃப் செயலி ஐகான் கணினியில் எப்போதும் இருக்கும். கணினி மூலம் வாட்ஸ் ஆஃப் ஆடியோ, விடியோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
குழு விடியோவில் அதிகபட்சமாக 8 பேரும், ஆடியோவில் 32 பேரையும் இணைக்கலாம். விடியோ கான்பரேன்ஸிங்கிறது பெரிய திரையை விரும்புபவர்களுக்கு இது மிகவும் உதவும்.
இதேபோல், ஒரு வாட்ஸ் ஆஃப் கணக்கை 4 கருவிகளில் இணைக்கவும் புதிய சேவை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு குழுக்களை ஒன்றாக இணைக்கும் கம்யூனிட்டிஸில் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. யார் எந்தக் குழுக்களில் சேரலாம் என்ற அழைப்பை குழுவின் அட்மின் அனுப்பலாம்.
கம்யூனிட்டிஸில் உள்ள குழுக்களில் ஒரே நபர் பல்வேறு குழுக்களில் உள்ளாரா என்பதை கண்டுபிடிக்கவும் புதிய சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதபோல், ஐபோன் பயன்பட்டாளர்கள் அனுப்பிய தகவலை 15 நிமிஷங்களில் திருத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. திருத்தப்பட்டது, தகவல் கிடைக்கப்பெற்றவரும் தெரிந்து கொள்வார்.
மேலும், புகைப்படத்தை ஒரு முறை மட்டும் பார்க்கும் வசதி இருப்பதைப்போல், ஒரு முறை மட்டும் கேட்கும் ஆடியோ வசதியையும் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அ.சர்ப்ராஸ்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...