

இயக்குநர் வெற்றிமாறன் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை சிறுமலைப் பகுதிகளில் ஷூட் செய்துவருகிறார். 20 நாள்கள் மட்டுமே எனத் தெளிவாகத் திட்டமிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டாலும், அது எப்படியும் இரண்டு மாதங்களைத் தாண்டிப்போகும் என நினைத்திருக்கிறது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்ட படக்குழு. ஆனால், திட்டமிட்டபடியே 20 நாள்களுக்குள் முடித்துக்காட்ட இரவு பகல் என மாற்றி மாற்றி ஷூட் செய்கிறாராம் வெற்றிமாறன். சூரி அங்கேயே கிடக்க, விஜய் சேதுபதியின் தேதி மட்டும் கிடைத்தால், சொன்னபடியே ஷூட்டிங்கை முடித்து வெற்றிகரமாகத் திரும்ப வாய்ப்பிருக்கிறதாம்.
-------------------------------------------------------
தமிழில் 'கார்கி' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. காஷ்மீரில் நடக்கும் அதன் படப்பிடிப்பிற்குத் தன் பெற்றோரையும் அழைத்துச் சென்றிருந்தார். அருகில்தான் அமர்நாத் யாத்திரை ஸ்தலம் என்பதால் யாத்திரை செல்ல விருப்பப்பட்டனர் பெற்றோர். அவர்களின் ஆசையை உடனே நிறைவேற்றி மகிழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி.
-------------------------------------------------------
பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலிக்கிறார். அதனை இருவரும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர். தான் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார். தமன்னா தனது கையில் மிகப்பெரிய வைர மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார். அந்த வைரம் உலகின் 5-ஆவது பெரிய வைரமாகும். மோதிரத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். மோதிரத்தை அவரின் காதலன் வாங்கிக் கொடுக்கவில்லை. அவரும் வாங்கவில்லை. நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா தமன்னாவிற்கு இந்த அளவுக்கு விலையுயர்ந்த பரிசைக் கொடுத்துள்ளார்.
-------------------------------------------------------
ராஜூ முருகனின் 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துக் கொடுத்திருக்கும் கார்த்தி, ஒரு பாடல் காட்சியை மட்டும் மீதம் வைத்திருக்கிறார். அடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு '96' இயக்குநர் பிரேம் இயக்கத்திலும், நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் இயக்குநர் கெளதம ராஜூவிடம் கதை கேட்டிருக்கிறார். பக்கா ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என கெளதம் சொன்ன கதை, கார்த்தியை ஈர்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.